Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிக்கிமை ஒட்டி சீன எல்லையில் இந்திய ராணுவம் குவிப்பு!

எல்லையில் ராணுவம் குவிப்புசிக்கிம், அருணாச்சலப் பிரதேசத்தை ஒட்டியுள்ள சீன எல்லையில் கூடுதல் ராணுவப் படைகளை இந்தியா நிறுத்தியுள்ளது. இந்தியா - சீனா இடையே 'டோக்லாம்' விவகாரம் தொடர்பாக கடந்த சில நாள்களாக போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய ராணுவப் படைகள் குவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

எல்லையில் ராணுவப் படைகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருப்பதை உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். டோக்லாம் பகுதியில் சீனப் படைகள் குவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சீனாவை ஒட்டியுள்ள இந்திய எல்லையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் கூறினார்.

இருநாடுகளுக்கும் இடையே போர் ஏற்படலாம் என்று பரவலாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இந்திய ராணுவத்தினர் குவிக்கப்பட்டிருப்பது, பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. அருணாச்சலப்பிரதேசம் மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் உள்ள ராணுவப் படைகள் இந்தியா - சீனா எல்லையில் நிறுத்தப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அந்த அதிகாரி மேலும் கூறினார். 

டோக்லாமை உரிமை கொண்டாடுவதில் சீனாவும், பூடானும் போட்டியில் உள்ளன. டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைத்ததைத் தொடர்ந்து, இந்தப் பிரச்னை மேலும் சூடுபிடித்தது. எனினும் பதற்றம் அதிகரித்ததைத் தொடர்ந்து, சாலை அமைக்கும் பணிகளை சீனா நிறுத்திக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close