Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குழந்தைகள் பலி: நீதி விசாரணைக்கு உ.பி. அரசு உத்தரவு!

குழந்தைகள் பலிகோரக்பூர் பாபா ராகவ் தாஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மாஜிஸ்திரேட் தலைமையில் நீதி விசாரணை நடத்த உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. அந்த மருத்துவமனையில் கடந்த இரு தினங்களாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 30 குழந்தைகள் உயிரிழந்தனர். ஆக்ஸிஜன் வழங்கியதை நிறுத்தியதால்தான் குழந்தைகள் உயிரிழந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. 

இந்நிலையில், ஆக்ஸிஜன் வழங்குவதில் ஏற்பட்ட குறைபாடே குழந்தைகள் உயிரிழப்புக்குக் காரணம் என்று வெளியான தகவலை உத்தரப்பிரதேச மாநிலக் கல்வி அமைச்சர் மறுத்துள்ளார். கோரக்பூர் மருத்துவக் கல்லூரில் கடந்த இரண்டு நாள்களில் 30 குழந்தைகள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது. இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னர்தான் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் அந்த மருத்துவமனையை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close