Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நடப்பாண்டில் 7.5% வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல்!

 

பொருளாதார ஆய்வறிக்கைநாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட 2016-2017-ம் ஆண்டிற்கான இரண்டாம் தொகுதி பொருளாதார ஆய்வறிக்கையில் இந்தியாவில் இந்தாண்டு வளர்ச்சி 6.75 முதல் 7.5 சதவிகிதம் வரை இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,

இந்த ஆய்வறிக்கை நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு நடவடிக்கை, விவசாயக் கடன் தள்ளுபடி, ஜி.எஸ்.டி வரிமுறை அமல் போன்ற காரணங்களால், இந்தாண்டில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட வளர்ச்சியை அடைவது சற்று கடினம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கியின் தொடர் நடவடிக்கைகளால், பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கிப் பயணிக்கும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களுக்கு முன் இருந்த எண்ணெய் சந்தை தற்போது முற்றிலுமாக மாறியுள்ளதாகவும், ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.7 சதவிகிதம் அளவுக்கு இந்தச் சந்தையால் வளர்ச்சி பாதிப்பு உருவாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close