Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திருச்செந்தூரில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.  

kodiyetram

திருச்செந்தூர் கோயிலில் நடைபெறும் முக்கியத் திருவிழாக்களில் ஆவணித் திருவிழாவும் ஒன்று. கொடியேற்றத்தை முன்னிட்டு நேற்று மாலை  வடக்கு ரத வீதியிலுள்ள திருவிழா மண்டபத்தில் சிதம்பர தாண்டவ விநாயகருக்குச் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு  கொடிப்பட்டத்துக்கு சிறப்பு தீபாராதனை செய்யப்பட்டு கோயில் யானை மீது கொடிப்பட்டம்  ரத வீதிகளில் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிசேகமும் நடைபெற்றது. இன்று காலை பக்தர்களின் ’’அரோகரா’’  கோஷத்துடன் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இன்று தொடங்கி வரும் 23ம் தேதி வரை 12 நாள்கள் திருவிழா நடைபெறுகிறது.  

வரும் 18-ம் தேதி 7-ம் நாள் திருவிழா அன்று காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் உருகுசட்ட சேவையும், 8.30 மணிக்கு சண்முக விலாசத்திலிருந்து சுவாமி வெட்டிவேர் சப்பரத்திலும் மாலை 4.30 மணிக்கு சிவப்பு சாத்தி சப்பரத்தில் திருவீதியுலா வருதலும் நடக்கிறது. 

kodiyetram theeparathanai

8-ம் நாள் திருவிழாவான 19-ம் தேதி காலை 5 மணிக்கு சுவாமி ஆறுமுகநயினார் வெள்ளி சப்பரத்திலும், காலை 10.30 மணிக்கு பச்சைசாத்தி சப்பரத்தில் எழுந்தருளி வீதியுலா வருதலும் நடக்கிறது. 10-ம் நாள் திருவிழாவான 21-ம் தேதி காலை 6 மணிக்கு ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  திருத்தேரோட்டமும் நடக்கிறது. திருவிழாவின் 12 நாள்களும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close