Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’அ.தி.மு.க.வில் யார் நம்பர் ஒன் 420’- கலாய்க்கும் திமுக எம்.எல்.ஏ

''அ.தி.மு.க.வில் அனைவருமே 420 தான்'' என்று தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார். 


சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ’அ.தி.மு.க.வில் யார் நம்பர் ஒன் 420 என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி நிலவுகிறது என்று கூறினார். தமிழக அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் மீண்டும் கொண்டுவரப்படும் என்று தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின் கூறியதற்கும், நடிகர் கமல்ஹாசனுக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கும் கமலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்று தெரிவித்தார்.

தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி. தினகரன், அமைச்சர்களை 420 என விமர்சித்திருந்தார். இதுகுறித்து டெல்லியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அந்த கேள்விக்குப் பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, 420 என்ற வார்த்தை டி.டி.வி. தினகரனுக்குத்தான் பொருத்தமாக இருக்கும் என்று பதிலடி கொடுத்திருந்தார். இந்தநிலையில், அதிமுகவில் இருக்கும் அனைவருமே 420 என்று தி.மு.க.வைச் சேர்ந்த ஜெ.அன்பழகன் விமர்சித்துள்ளார்.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close