Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜெயலலிதா வழியில் தினகரன்! சர்டிஃபிகேட் கொடுக்கும் எம்.எல்.ஏ.

ஜெயலலிதாவின் வழியில் டி.டி.வி தினகரன் நடக்கிறார் என்று ஏழுமலை எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.

தினகரனின் ஆதரவாளர்களில் ஒருவரான பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ ஏழுமலைக்கு ஜெ. பேரவை மாநில இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. தற்போது, தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தீர்மானம் நிறைவேற்றியதுடன், தினகரன் வெளியிட்ட நிர்வாகிகள் பட்டியலும் செல்லாது என்று அறிவித்துள்ளார். இது, தினகரனின் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ஏழுமலை எம்.எல்.ஏ-விடம் சில கேள்விகளை முன்வைத்தோம்.

தினகரனுக்கு எதிராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்துள்ளதற்கு என்ன காரணம்?

'சிலரை திருப்திப்படுத்த இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தினகரனை நீக்க பொதுச் செயலாளர் சசிகலாவுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. தினகரன், ஜெயலலிதா வழியில் நடக்கிறார். கட்சிக்காகவும், சின்னத்துக்காகவும் சிறைக்குச் சென்றவர் தினகரன். கட்சியிலிருந்து தினகரனை நீக்கம் செய்வதாக அறிவித்ததை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்."

தினகரன் உங்களுக்கு வழங்கிய பதவி செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளதே?

"தினகரன் அறிவித்த பதவியில் நான் தொடர்ந்து நீடித்து வருகிறேன். நிர்வாகிகளை நியமிக்கும் அதிகாரம் தினகரனுக்கு உண்டு. அதற்கான சட்டவிதிகள் கட்சியில் உள்ளது."

சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தால் தினகரனின் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் என்ன நிலை எடுப்பீர்கள்?

"அ.தி.மு.க-வின் வளர்ச்சிக்காக தினகரன் பாடுபட்டுவருகிறார். நாடாளுமன்ற தேர்தலைக் கருத்தில் கொண்டு அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். வரும் காலத்தில் ஆட்சியும், கட்சியும் தினகரன் வசம்தான் இருக்கும். நான் உள்பட அனைவரும் தினகரனுக்கு விசுவாசமாகவே இருப்போம். இந்த ஆட்சி எங்களால் எந்தக்காலத்திலும் கவிழ்க்கப்படாது. இரண்டு அணிகளும் இணைந்து ஜெயலலிதா விரும்பிய ஆட்சியை நடத்த நாங்களும் உறுதுணையாகவே இருப்போம்."

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தினகரனை நீக்கும் முடிவு குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

"முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நல்லவர். அவரை நிர்பந்தப்படுத்தி தீர்மானத்தில் கையெழுத்திட வைத்துள்ளார்கள். ஆனால், ஓ.பன்னீர்செல்வம், கட்சிக்குத் துரோகம் செய்தவர். டீக்கடை வைத்திருந்த ஓ.பன்னீர்செல்வத்தை முதல்வராக்கி அழகுப்பார்த்தவர் ஜெயலலிதா. ஆனால், அந்த நன்றியை மறந்து அவர் செயல்படுகிறார்."

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close