Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'டேக் இட் ஈஸி'- 420க்கு அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் புது விளக்கம்

டி.டி.வி.தினகரனை 420 என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாய் தவறி சொல்லியிருக்கலாம்; அதை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்று  அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

கோவையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், "உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானை- மனித மோதலை தடுக்க 'களிறு திட்டம்'  என்ற திட்டம் தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றது. இதற்காக இரு வாகனங்கள் அதி விரைவு தடுப்பு குழுவுக்கு பிரத்யேகமாக வழங்கப்பட்டிருக்கிறது. யானைகளால் ஏற்படும் பாதிப்புக் குறித்து 180042545456 என்ற ஹெல்ப் லைன் எண்ணில் பொதுமக்கள் புகார் அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலிருந்து கும்கி யானைகள் கேரளா மாநிலம் பாலக்காடு பகுதிக்குக் காட்டு யானைகளைக் கட்டுப்படுத்த அனுப்பப்பட்டுள்ளது. தண்ணீர் இல்லாமல் ஊருக்குள் புகும் வனவிலங்குகள் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த அகழிகள் ஏற்படுத்தவும், வனப்பகுதிக்குள் தண்ணீர் கிடைக்கவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

முதல்வர் பழனிசாமி தலைமையில் கட்சியும் ஆட்சியும் செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதாவால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் கட்சியை வழிநடத்திச் செல்கிறார்கள். பொறுத்திருந்து பாருங்கள். இப்போது அண்ணன் தம்பி  சண்டைதான் நடக்கிறது. இந்த ஆட்சி தொடர்ந்து 4 வருடம் நீடிக்கும். ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் என்பது கேஷியங்கள் மட்டுமே. ஊடகங்களில் வரக்கூடிய செய்தி மட்டுமே.  முதல்வர் பழனிசாமி அறிவிப்பதே சரியானது.

டி.டி.வி.தினகரன் 420 என்பது வாய் தவறிச் சொல்லியிருக்கலாம். 420 எனச் சொல்லியதற்கு சில விளக்கங்கள் அவர் சொல்லியிருக்கிறார். இதை டேக் இட் ஈஸியாக எடுத்துக்கொள்ளலாம். முதல்வர் எடப்பாடி  பழனிசாமி, டி.டி.வி.தினகரனை 420 என்று சொன்னதே தனக்குத் தெரியாது. முதல்வர் சொல்லியிருந்தால் அவரிடம் கேட்டுக்கொள்ளுங்கள். யாரும் யாரைப்பற்றி தரக்குறைவாகப் பேசினாலும்  அது தவறுதான். இதை அவர்கள் பேசித் தீர்த்துக்கொள்வார்கள். பொருளாளர் நியமனம் குறித்து ஏற்கெனவே கட்சியிலிருந்து வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தவறாகப் பேசுபவர்கள் தங்களைத் திருத்திக்கொள்ள வேண்டும். முதல்வர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு அரசியல் பிரச்னைகளைப் பேசித் தீர்க்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கிறது'' என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close