Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வழிதவறிச் செல்கிறார் கமல்: சொல்கிறார் செல்லூர் ராஜூ

நடிகர் கமல்ஹாசன் வழிதவறிச் செல்வதாக அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, "இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் கூட்டுறவு வங்கிகள் கூட்டம் கடந்த வாரம் சிறப்பாக நடைபெற்றது. அனைவரும் தமிழகத்தைப் பாராட்டி விட்டு சென்றார்கள். வருமான வரி கட்டும் அளவுக்குச் சிறப்பாகக் கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. ஆனால், திமுக ஆட்சியில் கூட்டுறவு சங்கங்கள் சிறப்பாக செயல்படவில்லை.

இது எம்.ஜி.ஆர் தோற்றுவித்த கட்சி. பலதடைகளைத் தாண்டி விரைவில் இரு அணிகளும் இணைந்து சிறப்பாகச் செயல்படுவோம். தினகரன் நடத்தும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இதில் கலந்துகொள்வது பற்றி முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுப்பேன். தினகரன் மட்டுமல்ல யார் எங்களைப் பற்றி குறைகளுடன் பேசினாலும் அதை முறியடித்து சிறப்பாகச் செயல்படுவோம்.

தொண்டர்களை யாரும் குழப்ப முடியாது. ஒன்றுபட்ட அ.தி.மு.க.வை விரைவில் ஒன்றிணைத்து சிறப்பாகச் செயல்படுவோம்.
ஸ்டாலின் தினந்தோறும் பத்திரிகையில் இடம் பெறுவதற்காகவே அவரது தந்தையைப் போல அரசின் மீது குறைகளேப் பேசிக்கொண்டு இருக்கிறார். கமல் ஒரு நல்ல நடிகர்; அனைவருக்கும் பொதுவானவர். அவர் தற்போது வழிதவறிச் செல்கிறார். அதை அவர் விரைவில் உணர்வார்'' என்று கூறினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close