Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர வாய்ப்பு!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டுக்கான அட்மிஷன் முடிந்து ஜூலை 17-ம் தேதி முதல் வகுப்புகள் நடந்து வருகின்றன. இந்தநிலையில் 'கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 20 சதவிகித கூடுதல் இடங்களுக்கு மாணவர்களைச் சேர்க்கலாம்' என்று மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். 

கலை மற்றும் அறிவியல் கல்லூரி


தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உயர்கல்வித்துறை அமைச்சர் இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் 'தமிழகத்தில் உள்ள அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 20 சதவிகித இடங்களுக்கு வரும் 16-ம் தேதி முதல் மாணவர்களைச் சேர்க்கலாம்' என்றும், இளங்கலை பாடப்பிரிவில் தமிழகத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் கூடுதலாக 20 சதவிகித  இடங்களும், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 15 சதவிகித இடங்களும், சுயநிதி கல்லூரிகளில் 10 சதவிகித இடங்களும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்' கூறியுள்ளார். 

இந்த அனுமதியின் மூலம், ஏற்கெனவே காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்களுக்கு இடம் கிடைக்குமா, அல்லது புதியதாக விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்து எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை.

இதுவரை, மருத்துவக் கலந்தாய்வில் பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் சேரலாம் என்று காத்திருப்பவர்களுக்கும், பொறியியல் கலந்தாய்வில் சரியான கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்களும், அரசு கலை அறிவியல் கல்லூரியில் சேரக் காத்திருந்த மாணவர்களும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close