Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

நெசவாளர் விருது… விண்ணப்பிப்பது எப்படி?

நெசவாளர் விருது

மத்திய அரசு சார்பில் நெசவாளர்களுக்கு வழங்கப்படும் சிறந்த நெசவாளர்களுக்கான விருதுக்கு வரும் 21-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என நெசவாளர் சேவை மையம் அறிவித்துள்ளது.

மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை சார்பாக தேசியக் கைத்தறி தினம் கடந்த 2015-ம் ஆண்டு முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்னையில் 2015-ம் ஆண்டு நடைபெற்ற விருதுவழங்கும் விழாவைத் தொடங்கி வைத்த மோடி, சிறந்த நெசவாளர்களுக்கான விருதுகளை வழங்கினார். 2015-ம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் விருது காஞ்சிபுரத்தைச் சேர்ந்த பத்மா என்பவருக்கு அளிக்கப்பட்டது. 2016-ம் ஆண்டிற்கான மத்திய அரசு சார்பாக நெசவாளர்களுக்கு தேசிய அளவில் வழங்கப்படும் விருதுக்கு விண்ணப்பிக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்திய அளவில் 12 பேருக்கு சந்த் கபீர் விருது வழங்கப்பட உள்ளது. அதுபோல் 32 பேருக்குச் சிறந்த நெசவாளர், வடிவமைப்பாளர், விற்பனையாளர் உள்ளிட்ட விருதுகளும் வழங்கப்பட உள்ளன. சான்றிதழ் விருது பெறுவதற்கு 40 பேர் தேர்வு என மொத்தம் 84 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேற்கண்ட விருதுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நெசவாளர்கள் அந்தந்த மாவட்ட நெசவாளர்கள் சேவை மையங்களில் ஆகஸ்ட் 21-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும், இது தொடர்பான விவரங்கள் handlooms.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close