Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

திரிபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்புப்படை வீரர் தற்கொலை!

திரிபுராவில் தமிழகத்தைச் சேர்ந்த பாதுகாப்புப் படை வீரர் கார்த்திகேயன் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

கார்த்திகேயன்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த இலுப்பகுணம் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திகேயன் திரிபுரா மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையில் பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில், கார்த்திகேயன் இன்று காலையில் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிச் சுமை காரணமாக ஏற்பட்ட மன அழுத்தத்தால் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக பாதுகாப்புப் படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மன அழுத்தம் காரணமாகப் பாதுகாப்புப் படையில் பணிபுரியும் வீரர்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வு அவ்வப்போது நடந்து வருகிறது. வீரர்களின் மன அழுத்தத்தைப் போக்க உரிய பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் நீண்டகால கோரிக்கையாக இருந்துவருகிறது.  

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close