Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'மீண்டும் சேகர்ரெட்டி!' - மிரள வைத்த லிப்டிங் கான்டிராக்ட்

அரசு மணல் குவாரி

அரசு மணல் குவாரிகளில் சேகர்ரெட்டியின் ஆதரவாளர்களுக்கு லிப்டிங் கான்டிராக்ட் விடப்பட்டுள்ளது. மேலும், ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் லிப்டிங் கான்டிராக்ட் மூலம் மணல் பிசினஸில் மீண்டும் களமிறங்கியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க.விலும் ஆட்சியிலும் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளன. ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக்கப்பட்டது சசிகலாவுக்குப் பிடிக்கவில்லை. தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் ஓ.பன்னீர்செல்வம். அதன்பிறகு சசிகலாவால் கைக்காட்டப்பட்ட எடப்பாடி பழனிசாமி முதல்வரானார். எடப்பாடி பழனிசாமி முதல்வரானபிறகும் நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித்துறை ஆகியவற்றை தன்வசமே வைத்துள்ளார். இந்த சமயத்தில் தொழிலதிபர் சேகர்ரெட்டி கைதுக்குப்பிறகு தமிழகத்தில் மணல் விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மணல் தட்டுப்பாடு காரணமாக தமிழகத்தில் கட்டுமானப்பணிகள் முடங்கின. 

இதையடுத்து, மணல் தட்டுப்பாட்டை சமாளிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டார். மணல் பிசினஸை அரசே ஏற்று நடத்தும் என்று அறிவித்தார். இதற்கான மொபைல் ஆப்ஸ் ஒன்றையும் அறிமுகப்படுத்தினார். அதன்மூலம் மணல் தேவைப்படுவோர், முன்பதிவு செய்துவருகின்றனர். இருப்பினும் மணல் விற்பனையில் முறைகேடு நடப்பதாக உள்விவர வட்டாரங்கள் தெரிவித்தன. ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்தாலும் ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களின் வாகனங்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. அதோடு போலி வாகனப்பதிவு எண் மூலம் முன்பதிவில் முறைகேடு நடக்கிறது என்று மணல் லாரி உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆன் லைன் மூலம் முன்பதிவு

இந்தச் சூழ்நிலையில் அரசே நடத்தும் மணல் குவாரிகளில் லிப்டிங் பணியை ஆளுங்கட்சியினருக்குக் கான்டிராக்ட் விடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. தமிழகம் முழுவதும் இந்தப்பணிகளை முதல்வர்  பழனிசாமிக்கு வேண்டப்பட்ட  ஆளுங்கட்சி பிரமுகர்கள் எடுத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் பாலாறில் உள்ள மணல் குவாரியில் லிப்டிங் பணியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு மூலம் சென்னையைச் சேர்ந்த ஆளுங்கட்சி பிரமுகர் விஜய்கார்த்திக் என்ற ஜெ.எம்.பஷீர் கொடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மற்ற மணல் குவாரிகளிலும் லிப்டிங் பணியை ஆளுங்கட்சியினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளதாகச் சொல்கின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.  
இதுகுறித்து பொதுப்பணித்துறை வட்டாரங்கள் கூறுகையில், "மணல் குவாரியை முழுமையாக அரசே நடத்த வேண்டும் என்பதற்காகத்தான் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. ஆன் லைன் மூலம் முன்பதிவு செய்தால் முறைகேடுகள் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதிலும் முறைகேடு நடப்பதாக எங்களுக்குத் தகவல் வந்துள்ளது. அதுகுறித்த விசாரணை நடந்துவருகிறது. அரசு குவாரிகளை நடத்தினாலும் முன்பு லிப்டிங் மற்றும் லோடிங் பணி மட்டுமே தனியாருக்கு கான்டிராக்ட் விடப்பட்டது. அதுவே செகண்ட் சேல்ஸ் மணல் என்று ஆளுங்கட்சி பிரமுகர்களின் தலையீடுக்கு காரணமாக அமைந்தது. தற்போது, மீண்டும் லிப்டிங் பணி ஆளுங்கட்சியினருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி

இதுகுறித்து பேசிய முதல்வர் பழனிசாமி தரப்பினர், "மணல் பிசினஸ் மூலம் கிடைக்கும் வருமானம் அரசுக்கு வர வேண்டும் என்று நடவடிக்கை எடுத்துவருகிறோம். இதற்காகத்தான் மொபைல் ஆப்ஸ் மூலம் ஆன்லைனில் முன்பதிவு நடந்துவருகிறது. முதல்வர் மீது குற்றம் சுமத்த இதுபோன்ற தவறான தகவல்கள் பரப்படுகின்றன என்றனர்.  அ.தி.மு.க. வட்டாரங்கள் கூறுகையில், "தமிழகத்தில் உள்ள சில மணல் குவாரிகளில் லிப்டிங் கான்டிராக்ட் பணியை சேகர் ரெட்டியின் ஆதரவாளர்கள் எடுத்துள்ளனர். ஒரே பெயரைக் கொண்ட இரண்டு அமைச்சர்களில் ஒருவரின் ஆதரவாளரும் லிப்டிங் கான்டிராக்ட் எடுத்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், பாலாறில் சசிகலா குடும்பத்தினருடனும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும் நம்பிக்கையுள்ளவராக இருந்துவரும் விஜய்கார்த்திக்கு லிப்டிங் கான்ராக்ட் கொடுக்கப்பட்டுள்ளது" என்றனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close