Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் ஆட்சி என்பது பாஜக விரக்தியின் வெளிப்பாடு! முதல்வர் நாராயணசாமி காட்டம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தான் பதவியேற்ற நாளிலிருந்து வார இறுதி நாள்களில் நகரம் மற்றும் கிராமப் பகுதிகளுக்குச் சென்று மக்களைச் சந்தித்து குறைகள் கேட்பதோடு ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட இடங்களை ஆய்வு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அதேபோல ”ஒவ்வொரு வாரமும் தொகுதி வாரியாக அமைச்சர்கள் அதிகாரிகளுடன் சென்று மக்களின் கோரிக்கைகளை அங்கேயே நிறைவேற்றவிருப்பதாக முதல்வர் நாராயணசாமி அறிவித்திருக்கிறார்.

புதுச்சேரி

சட்டமன்றத்தில் இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ”புதுச்சேரி மாநிலத்தில் மத்திய அரசு மூன்று நியமன எம்.எல்.ஏ-க்களை நியமித்தது, அவர்களுக்குத் துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தது குறித்த வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றது. இதற்கிடையில் பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் விரைவில் புதுச்சேரியில் பாஜக ஆட்சி மலரும் என்று அறிக்கை விட்டிருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஓர் உறுப்பினர் கூட இல்லாத கட்சி பாஜக. அவர்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வேடிக்கையாக மட்டுமல்ல விந்தையாகவும் இருக்கின்றது. ஆட்சியில் இருப்பவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை மற்ற மாநிலங்களில் அவர்கள் கொள்கையாக வைத்திருக்கிறார்கள். அதை இங்கு செய்யப் போகிறார்களா? குஜராத்தில் ஒரு மேலவை உறுப்பினர் பதவிக்கு மத்திய மற்றும் மாநில அரசின் அதிகார பலம், பணம் பலம் ஆகியவற்றைப் பயன்படுத்தினார்கள். ஆனால், அதையெல்லாம் முறியடித்து அகமது பட்டேல் வெற்றி பெற்றிருக்கிறார்.

பா.ஜ.க-வைப் பொறுத்தவரை புதுச்சேரியில் வேரூன்ற முடியாத ஒரு கட்சி. அவர்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது அவர்களின் விரக்தியைக் காட்டுகிறது. கடந்த சட்டமன்றப் பொதுத்தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய 18 இடங்களிலும் பாஜக டெபாசிட் இழந்தது. ஆனால், அவர்கள் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது பகல் கனவு .ச்2காண்பது போல் உள்ளது. வருகின்ற செப்டம்பர் மாதம் முதல் வாரம் ஒரு சட்டமன்றத் தொகுதி என்று அமைச்சர்கள், அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் துறைசார்ந்த அதிகாரிகளுடன் செல்ல இருக்கிறோம். அப்போது மக்களின் குறைகள் கோரிக்கைகளை அங்கேயே நிறைவேற்றுவதற்காக நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம்” என்றவரிடம் துறைமுகம் திட்டம் தொடர்பாக ஆளுநர் கிரண்பேடியின் குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது ”அது குறித்த எந்தக் கடிதமும் எங்களுக்கு வரவில்லை. அவர்கள் வாட்ஸ்அப்பில் கூறுவதற்கெல்லாம் என்னால் பதில் அளிக்க முடியாது” என்று தெரிவித்தார்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close