Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை ஓடிய மினி மாரத்தான்!

71வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கோம்பை இளையோர் சங்கம் சார்பில் தேனி மாவட்டம் தேவாரத்தில் மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

 

முன்னதாக இப்போட்டியை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். சுமார் 300 பேர் வரை இந்த மினி மாரத்தானில் கலந்துகொண்டனர். கோம்பையிலிருந்து தேவாரம் வரை 12 கிலோமீட்டர் தூரம் ஓடிய போட்டியாளர்கள் மீண்டும் கோம்பை திரும்பினர்.

பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை மிக ஆர்வமாக இப்போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் கே.கே.பட்டியைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞருக்குப் பரிசுத்தொகை 3 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. மேலும் முதல் 10 பேருக்குக் கேடயம் வழங்கப்பட்டது. தேனி மாவட்டம் முழுவதும் இது போன்ற மாரத்தான் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டிருப்பதாக மாரத்தான் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். அதன்மூலம் இளைஞர்களை விளையாட்டில் ஆர்வப்படுத்த முடியும் எனவும், அவர்களை நல்வழிப்படுத்த முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close