Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'எடப்பாடியை மிரளவைக்கும் மேலூர்கூட்டம்!' - அமைச்சர்களுடன் கைகோக்கும் தினகரன்

தினகரன், திவாகரன்

மேலூர் கூட்டத்தில் பங்கேற்குமாறு தங்களுடையை ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு தினகரன், திவாகரன் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதில், இரண்டு அமைச்சர்கள், 17 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கலாம் என்ற தகவல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணியினர் கடந்த 10ம் தேதி, தினகரனுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றினார். இது, தினகரன் ஆதரவாளர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்தச் சூழ்நிலையில் மதுரை மாவட்டம் மேலூர் வரும் 14ம் தேதி தினகரன் ஆதரவாளர்கள் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இந்தக் கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி கிடைக்காததால் நீதிமன்றம் மூலம் அனுமதி பெற்றுள்ளனர்.  

கூட்டத்தில் பங்கேற்க தங்களுடைய ஆதரவாளர்களுக்கு தினகரன், திவாகரன் தரப்பிலிருந்து அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. தினகரனை கட்சியிலிருந்து நீக்குவதற்கு முன்பு அவருக்கு 37 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. தற்போது அந்த எண்ணிக்கை குறைந்துள்ளது. மேலூர் கூட்டத்துக்கு 17 எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தினகரனிடம் உறுதியளித்துள்ளனர். அதுபோல திவாகரனின் தீவிர ஆதரவு அமைச்சர்கள் இரண்டு பேரும், சில எம்.எல்.ஏ.க்களும் கூட்டத்தில் பங்கேற்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

 திருப்பரங்குன்றம் எம்.எல்.ஏ. போஸ், நிலக்கோட்டை எம்.எல்.ஏ. தங்கதுரை, மானாமதுரை எம்.எல்.ஏ. மாரியப்பன் கென்னடி, பெரியகுளம் எம்.எல்.ஏ. கதிர்காமு, சாத்தூர் எம்.எல்.ஏ. சுப்பிரமணியன், பரமக்குடி எம்.எல்.ஏ. டாக்டர் கே.முத்தையா, ஆம்பூர் எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியன், பூந்தமல்லி எம்.எல்.ஏ. ஏழுமலை, ஜக்கையன் உள்பட 17 எம்.எல்.ஏ.க்களும் மேலூர் கூட்டத்துக்கு வருவதாக உறுதியளித்துள்ளனர். திவாகரனின் ஆதரவாளர் அமைச்சர்கள் இருவரையும் கூட்டத்துக்கு வரும்படி அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதாம். ஆனால், அவர்கள் தரப்பிலிருந்து இதுவரை எந்தவித உத்தரவாதமும் கொடுக்கப்படவில்லை. 

இதுகுறித்து தினகரனின் ஆதரவாளர்கள் கூறுகையில், "மேலூர் கூட்டம் நடக்கும் இடத்தை தினகரன் பார்வையிட்டுள்ளார். தினகரன், திவாகரன், எம்.நடராசன் ஆகிய மூன்று பேரும் மேடையில் ஏற உள்ளனர். இதுதவிர மூன்று பேரின் ஆதரவாளர்கள் கூட்டத்துக்கு வரவுள்ளனர். கூட்டத்துக்கு வரும் தொண்டர்களின் எண்ணிக்கைக்குப்பிறகு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணி, ஓ.பன்னீர்செல்வம் அணி ஆகியவற்றில் பெரியளவில் மாற்றம் ஏற்படும். தமிழகம் முழுவதுதிலிருந்து அ.தி.மு.க. தொண்டர்கள் வரவுள்ளனர். கர்நாடக மாநிலத்திலிருந்தும் நிர்வாகிகள் வருவார்கள். கூட்டத்தில் எம்.நடராசன், தினகரன், திவாகரன் ஆகியோர் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளனர். எங்களால் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ஆட்சிக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அமைதியாக இருக்கிறோம் என்றுக் கருதி எங்களுக்கு தொடர்ந்து நெருக்கடி கொடுத்தால் அதன்விளைவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு சந்திக்க நேரிடும்" என்றனர். 

மேலூர் கூட்டத்தில் பங்கேற்க தினகரனின் ஆதரவாளர்கள் தயாராகிவிட்டனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலிருந்து தலா 100 வாகனங்களில் செல்ல திட்டமிட்டுள்ளனர். இதுகுறித்து திருவள்ளூர் வடக்கு மாவட்ட மாணவரணி துணைச் செயலாளர் ஏ.பி.ஜாகீர் அப்பாஸ் கூறுகையில், "திருவள்ளூர் மாவட்ட மாணவரணி சார்பில் 25 வாகனங்களில் மேலூர் கூட்டத்துக்குச் செல்லவுள்ளோம். மேலூர் கூட்டம் நிச்சயம் திருப்புமுனையாக அமையும். தினகரனின் அரசியல் தந்திரத்துக்கு எதிரணியினரால் தாக்குப்பிடிக்க முடியாது" என்றார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close