Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உதயச்சந்திரன் போல் இருந்தால்தான் தமிழகம் முன்னேறும்..! அன்புமணி அதிரடி

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரன் போல மற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் இருந்தால் தமிழகம் முன்னேறியிருக்கும் என்று பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். 

பள்ளிக்கல்வித் துறை செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்தத் தயாரா என்று அன்புமணியிடம் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் சவால் விடுத்திருந்த நிலையில், அதையேற்று அவருடன் எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் விவாதம் நடத்தத் தயாராக இருப்பதாக பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி அறிவித்து இருந்தார். இதையடுத்து இன்று மாலை 4 மணிக்கு 'சென்னை ராஜா அண்ணாமலைபுரம், முத்தமிழ் பேரவைக்கு (எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரி எதிரே) விவாதம் நடைபெறும் என்று செங்கோட்டையனுக்கு அழைப்புவிடுத்திருந்தார்.  இந்த விவாதத்தில் பங்கேற்பதற்காக அன்புமணி ராமதாஸ் ராஜா அண்ணாமலைபுரத்துக்கு வருகை தந்தார். ஆனால், செங்கோட்டையன் வரவில்லை.

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அன்புமணி ராமதாஸ், 'பள்ளிக் கல்வித்துறை குறித்து குற்றம்சாட்டுவதற்காக நான் விவாதத்துக்கு ஏற்பாடு செய்யவில்லை. பள்ளிக்கல்வித்துறை குறித்து ஆக்கப்பூர்வமான கருத்தரங்கமாக இது இருக்கும் என்று எண்ணினேன். அவர் வராதது எனக்கு வருத்தம். உதயச்சந்திரனை பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமித்ததுற்கு நான் பாராட்டு தெரிவித்திருந்தேன். எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளும் உதயச்சந்திரன் போல் இருந்தால் தமிழகம் எப்போதோ முன்னேறியிருக்கும். 90 சதவீத ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் ஊழல் பேர்வழிகள் தான்' என்று தெரிவித்தார். 


 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close