Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'பூச்சிகளை அழிக்க நினைத்தால் அழிவது நாம்தான்' எச்சரிக்கும் இயற்கை ஆர்வலர்கள்

பூச்சிகள் விவசாயிகளின் நண்பன்; அதை விரோதமாக நினைத்து அழிக்க நினைத்தால் அழிவது பூச்சிகள் அல்ல நாம்தான்.
தமிழ்நாட்டில் இயற்கை விவசாயத்தை பற்றிய விழிப்புஉணர்வு இளைஞர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் அரியலூரில் தமிழ்க்காடு இயற்கை வேளாண்மை இயக்கத்தின் சார்பில் விதைத்திருவிழா, கண்காட்சி மற்றும் இயற்கை வேளாண்மை கருத்தரங்குகள் நடைபெற்றன.

கண்காட்சியில் நாட்டு நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, அருபதாம் குருவை மற்றும் நாட்டுகம்பு, குதிரை வாலி, கடலை, உளுந்து, முந்திரி, நாட்டுப் பருத்தி விதைகள், சிறுதானிய விதைகள், அரிய மூலிகைச் செடிகள் உள்ளிட்டவைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டது.

இயற்கை சாகுபடிக்கான இடுபொருள்கள், இயற்கை உணவுகள், வீட்டுத்தோட்டம் அமைப்பது குறித்த ஆலோசனைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து நடைபெற்ற கருத்தரங்கு நிகழ்ச்சியில் பூச்சியியல் வல்லுநர் செல்வம், ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்து ஏகாம்பரம், நாட்டு விதைகள் என்பது குறித்து யோகநாதன் உள்ளிட்ட இயற்கை ஆர்வலர்கள் கலந்து கொண்டு இயற்கை வேளாண்மை குறித்து விரிவாகப் பேசினார்கள்.

பூச்சியியல் வல்லுநர் செல்வம் பேசுகையில். மனிதன் மட்டுமில்லாமல் கால்நடைகளும் உண்ணும் உணவில் பல்வேறு ரசாயன பூச்சிமருந்துகள் கலந்துள்ளதால் மனிதனைப் போலவே கால்நடைகளும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில் விவசாயிகள் இயற்கை முறையில் விவசாயம் செய்ய வேண்டும் என்ற கருத்து தற்போது வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இயற்கை முறையில் நாட்டு விதைகளைக் கொண்டு சாகுபடி செய்யும் போது உயிர்க்கொல்லி மருந்துகளை அடிக்க வேண்டிய அவசியமில்லை. இம்மருந்தை அடிப்பதால் பயிருக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சிகளும் அழிக்கப்பட்டு நஞ்சு கலந்த உணவே நமக்குக் கிடைக்கிறது. இதற்கு மாற்றாக பயிர்களுக்கு நன்மை செய்யக்கூடிய பூச்சுகளைப் பெருக்குவதால் தீமைசெய்யக்கூடிய பூச்சுகள் அதுவே அழிந்துவிடும்.

நன்மை செய்யும் பூச்சுகளை கவர்ந்து இழுக்கக்கூடிய தானிய வகைப்பயிர்களை வயல்களின் ஓரங்களில் நடுவதால் நன்மை செய்யும் பூச்சுகள் பெருகி அது தீமை செய்யும் பூச்சுகளை அழித்து விடுகின்றன. இதனால் நமக்கு இயற்கையான உணவு கிடைக்கிறது. ஒவ்வொரு விவசாயியும் விதைகளில் தற்சார்பு நிலையை அடையவேண்டும். நாட்டு விதைகளை ஒவ்வொரு விவசாயியும் தங்களுக்குள் பகிர்ந்து கொள்ள வேண்டும். இதன் மூலம் நாட்டு விதைகளைப் பெருக்கிக் கொள்ள முடியும். விளைச்சல் அதிகம் கிடைக்கும் என்ற எண்ணத்தில் வீரிய ஒட்டுரக விதைகளைப் பயன்படுத்துவதால் அதற்கான சாகுபடி செலவும் அதிகரித்து விவசாயிகள் பெருமளவு நஷ்டத்துக்குத் தள்ளப்படுகின்றனர். எனவே விவசாயிகள் நாட்டுவிதைகளில் தற்சார்பு நிலையை அடைய வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தினர். இந்தக் கண்காட்சியில் கடலூர், பெரம்பலூர் மாவட்டங்களிலிருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு நாட்டு விதைகளை வாங்கிச் சென்றனர். பூச்சிகள் விவசாயிகளின் நண்பன் அதை விரோதமாக அழிக்க நினைத்தால் அழிவது பூச்சிகள் அல்ல நாம்தான். இதை மனதில் வைத்துகொண்டு ஒவ்வொரு விவசாயிகளும் நிலத்தில் கால்வைக்க வேண்டும்'' என்று பேசிமுடித்தார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close