Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புஷ்கர விழாவில் முதல்வர் எடப்பாடி: காவிரியில் புனிதநீராடுகிறார்!

நாகை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி துலாக்கட்டத்தில் செப்டம்பர் 12-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை நடைபெறவுள்ள காவிரிபுஷ்கரம் திருவிழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொள்ள உள்ளதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.  

144 ஆண்டுகளுக்கு பிறகு குருபகவான் காவிரி நதிக்குரிய துலாம் ராசிக்கு இடம்பெயரும் நன்னாள்தான் காவிரிபுஷ்கரம் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது.  இந்த விழாகுறித்து நாகை கலெக்டர் அலுவலகத்தில் ஓ.எஸ். மணியன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.  துலாக்கட்டத்தில் ஆண்டுமுழுவம் பக்தர்கள் புனிதநீராடுவதற்கு வசதியாக ரூ.2 கோடிய செலவில் நிரந்தர நீர்தேக்கம் அமைக்கும்பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  அதில் நீர்நிரப்ப வசதியாக 10 குதிரைத்திறன் கொண்ட போர்வெல் அமைப்பதுதென்றும், விழா நாளில் கூடும் பல்லாயிரகணக்கான பக்தர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவது என்றும், கழிவறை வசதிகள் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே உடைமாற்றும் அறைகள், ஓய்வறைகள், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்து மயிலாடுதுறை வருவதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் ஆகியன ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.  இதில் மூத்தகுடிமக்கள் சிரமமின்றி சென்றுவர பேட்டரிகார் வசதியும் சிறப்பாக செய்யப்படவுள்ளது.  

காவிரி  ஆற்றில் மும்முரமாக நடைபெறும் புஷ்கர திருவிழா பணிகளை புதுச்சேரி ஓங்கார ஆசிரமம், ஓங்காரநந்தா சுவாமிகள் பார்வையிட்டார்.  அவரிடம் பேசுகையில், 'தீர்த்தம் என்றால் புனிதமான நீர் என்று பொருள்.  மயிலாடுதுறை காவிரி துலக்கட்டத்தில் ஐப்பசி மாதம் 30 நாட்களும், காவிரி புனிதமாக இருப்பதால் அந்நாளில் நீராடினால் பாவங்கள் நீங்கும்.  கங்கை முதலான புண்ணிய நதிகள் எல்லாம் இங்குவந்து நீராடி தங்கள் பாவங்களை போக்கிக்கொள்கின்றன என்பது ஐதீகம்.  இந்த ஆண்டு காவிரிபுஷ்கரம் வருவதால் பக்தர்கள் இந்த வாய்பைப் பயன்படுத்தி காவிரியில் புனிதநீராடி வாழ்வில் முக்திபெறலம்’ என்றார்.  

இந்த வரலாற்று சிறப்புமிக்க காவிரி மகாபுஷ்கர விழாவில் தமிழகத்தின் முதல்வர் எடப்படி பழனிசாமி கலந்துகொண்டு புனிதநீராடி சுவாமி தரிசனம் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  மேலும், பல அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள், ஆதீனங்கள், மடாதிபதிகள், பக்தாகள் என பல்லாயிர கணக்கானோர் மயிலாடுதுறைக்கு வருகைதருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோல் காவிரி புஷ்கரவிழா இனி 2161ம் ஆண்டில்தான் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.  

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close