Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

விருதுநகரில் டாஸ்மாக்கை அடித்து நொறுக்கிய பெண்கள்..!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிழவன்கோவில் கிராமத்தில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை பெண்களே அடித்து நொறுக்கினர். 

கூடல்நகர்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் ஒவ்வொரு ஊரிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. போலிஸ் மிரட்டலுக்கோ, வழக்குக்கோ மக்கள் அஞ்சுவதாக இல்லை. நகரமோ, கிராமமோ எங்கே கடை இருந்தாலும், புதிதாக திறந்தாலும் பெண்கள் களத்தில் இறங்கி விடுகிறார்கள். புகார் தெரிவித்தும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என்றால், கடைகளை அடித்து  துவம்சம் செய்துவருகிறார்கள். நேற்று விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிழவன்கோயில் கிராமத்தில் புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை பெண்களே அடித்து நொறுக்கினார்கள்.

இன்று மதுரை மாநகராட்சியின் புறநகர்பகுதியான கூடல்நகரில் திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு எதிராக போராட்டங்கள் நடத்தியும் பலனில்லாததால், விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், அப்பகுதியைச் சேர்ந்த பெண்களும் உருட்டுக்கடையோடு வந்து அடித்து நொறுக்கினார்கள். தங்கள் குடும்பங்களெல்லாம் சீரழிவதற்கு  மதுக்கடைகள்தான் காரணமென்று சொல்லிக்கொண்டே அடித்து நொறுக்கினார்கள். மதுக்கடை ஊழியர்கள், தப்பித்தால் போதுமென்று ஓடினார்கள். அங்கிருந்த குடிமகன்கள் பெண்களின் ஆவேசத்தை பார்த்து எஸ்கேப்பாகிவிட்டார்கள். பெண்களின் ஆவேசத்தைக் கண்டு அனைவரும் நடுங்கிப்போனார்கள். அதன்பின்னர் வந்த காவல்துறையினர் அனைவரையும் கைது செய்தனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close