Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கன்னியாகுமரி டூ காஷ்மீர் சாலை புனரமைப்பு பணியை அமைச்சர் ஆய்வு!.

 

 

கன்னியாகுமரி டூ காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை புனரமைக்கும் பணியை கரூரில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார். அதோடு,மேம்பாலம் அமைக்கும் பணியையும் கள ஆய்வு செய்தார். 


கன்னியாகுமரி டு காஷ்மீர் சாலையில் அதிகம் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்படுகின்றன. அதனை தடுத்து, கரூர் நகர் வழியாக போகும் அந்த பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும்விதமாக அந்த சாலை புனரமைப்பு செய்யப்படுகிறது.
தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கரூரில் கோவை சாலையில் அமைக்கப்படும் மேம்பாலத்தை கள ஆய்வு செய்தார். கூடவே, கரூரின் முக்கிய பிரதான சாலையான கன்னியாகுமரி டூ காஷ்மீர் சாலையில் நடைபெறும் புனரமைப்பு பணிகளையும் அவர் பார்வையிட்டார். அப்போது, அவரோடு இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநர் சிவாஜி, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் செந்தில், தாந்தோன்றிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.சரவணன் உள்ளிட்ட பலரும் உடன் வந்தனர்.

ஆய்வுக்குப் பிறகு, அமைச்சர் பேசியதாவது, "கரூரின் முக்கிய பிரதான சாலையான கன்னியாகுமரி டூ காஷ்மீர் சாலையில் அதிக போக்குவரத்து நெரிசல் இருப்பதால், அதனை சரிசெய்து போக்குவரத்து நெரிசலின்றி சரிசெய்து புனரமைப்பதற்காக இந்திய தேசிய நெடுஞ்சாலைத்துறையின் திட்ட இயக்குநரோடு இன்று ஆய்வு செய்யப்படுகிறது. இதேபோன்று,கரூரில் ஈரோடு,கோவை சந்திப்பு சாலைகள் உள்ள பகுதியில் மேம்பாலம் அமைக்கவும் இன்று கள ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பணிகளும் விரைந்து முடிக்கப்படும். பிரதான கன்னியாகுமரி டூ காஷ்மீர் சாலையில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படும்" என்று தெரிவித்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close