Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மதுரை மீண்டும் கடம்பவனமாக மாறும்!

மதுரை மீண்டும் கடம்பவனமாக மாறும் சூழல் ஏற்பட்டுள்ளது.  தல்லாகுளம் பெருமாள்கோயில் திருமுக்குளக்கரையில் மரங்கள் நடப்பட்டன.  மிகவும் பிரசித்தி பெற்ற தல்லாகுளம் பெருமாள் கோவிலில் உள்ள திருமுக்குளத்தின் கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது. பல வருடங்களுக்கு முன்பு இங்கு ஏராளமான மரங்கள் இருந்ததாகவும் காலப்போக்கில் அவைகள் பராமரிக்கப்படாமல் அழிந்ததாகவும்  சொல்லப்படுகிறது. இந்நிலையில் நேற்று குளத்தின் கரையோரங்களில் மகிழம், கடம்பு, வேம்பு, கொன்றை மரக்கன்றுகளை மதுரை மத்திய ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் நட்டனர்.

இது சம்பந்தமாக நம்மிடம் பேசியவர்கள், ‘’மதுரை மாநகரம் வரும்காலத்தில் பசுமை நகராக மாறவேண்டும் என்ற நோக்கத்தில், ரோட்டரி கிளப்  மூலமாக  மரக்கன்றுகளை நட்டு வருகிறோம்.  தல்லாகுளம் பெருமாள் கோவிலில் நூறு மரங்கள் நட்டுள்ளோம். மதுரையை கடம்பவனம் என்பார்கள். அதனை மீண்டும் கொண்டு வரும் வகையில், கடம்ப மரத்தையும், பெருமாளின் விருட்சமான மகிழ மரத்தையும் அதிக அளவில் நட்டுள்ளோம். தற்போது குளத்தில் தண்ணீர் இல்லாதால் ஆழ்துளைக்குழாய் அமைத்து, நாள்தோறும் தண்ணீர் பாய்ச்ச ஆளும் நியமித்துள்ளோம். மதுரையில்  பல்வேறு இடங்களில் 500 மரக்கன்றுகளை நட்டுள்ளோம். குறைவாக இருந்தாலும், அனைத்தையும் வளர்த்தெடுக்க அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறோம்’’ என்றனர்.  மதுரை மீண்டும் கடம்பவனமாக மாறட்டும்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close