Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சிறுத்தை தலையுடன் ஒருவர் கைது: வனத்துறையின் ஆப்ரேஷன் சக்சஸ்.!

தேனி மாவட்டம், கோம்பை தொழுவை சேந்தவர் சசிகுமார். இவர் வனவிலங்குகளின் தோல், பல், எழும்பு ஆகியவற்றை கள்ளச்சந்தையில் விற்றுவருபவர். இவரைப் பற்றிய தகவல்கள் வனத்துறைக்கு சென்றது. உடனடி நடவடிக்கையில் இறங்கிய வனத்துறையினர். சசிகுமாரை கைது செய்வது மட்டும் அவர்களின் நோக்கம் அல்ல என்பதாலும், அவருக்கு பின்னால் யார் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்ற தகவல் வேண்டும் என்பதாலும், சசிகுமாரிடம் சிறுத்தை தோல் மற்றும் யானை தந்தம் ஆகியவற்றை வாங்கி வெளிநாடுகளுக்கு விற்கும் வியாபாரிகள் போல வனத்துறையினர் மாறுவேடத்தில் வந்தனர்.

உண்மையான வியாபாரிகள் என நம்பிய சசிகுமார், ‘நீங்கள் கேட்கும் பொருள்களை எல்லாம் ரெடி பண்ணுவதற்கு நாள்கள் ஆகும்’ என்று கூறியுள்ளார். ‘எவ்வளவு நாள்கள் ஆனாலும் பரவாயில்லை என்று கூறிய மாறுவேடத்தில் இருக்கும் வனத்துறையினர் சில நாள்கள் பொறுமையாக இருந்ததுடன், சசிகுமாரை தங்களது கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டுவந்தனர். அந்த கண்காணிப்பின் போது, மண்ணூத்து கிராமத்தைச் சேர்ந்த பூமிநாதன் மற்றும் வருசநாட்டைச் சேர்ந்த ஜீவா ஆகியோரிடம் சசிகுமார் நட்பு வைத்துக்கொண்டு வன விலங்குகளை சட்டத்திற்கு புறம்பாக வேட்டையாடி அதன் மூலம் கள்ளச்சந்தையில் பணம் பார்த்துவருவது தெரியவந்தது. ஆதாரத்தோடு மூவரையும் கைது செய்ய வேண்டும் என்பதால் பொறுமையாக இருந்த வனத்துறையினருக்கு ஒரு நாள் சசிகுமாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ‘நீங்கள் கேட்ட பொருள்கள் எல்லாம் தயாராக இருக்கிறது. மதுரை ஆரப்பாளையம் பேருந்து நிலையத்திற்கு வாங்க. கொடுக்கிறேன்’ என்றார் சசிகுமார். ஆரப்பாளையம் விரைந்த வனத்துறையினர் அங்கே சசிகுமாரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து மான் கொம்பு, யானை தந்தம், புலிப்பல், புலி நகம், யானை பல், சிறுத்தை மண்டையோடு ஆகியவற்றை கைப்பற்றினர். இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் ஜீவா மற்றும் பூமிநாதனை போலீசார் தீவிரமாக தேடிவருகிறார்கள். அதிக காடுகள் பரப்பளவை உள்ளடக்கிய மாவட்டங்களில் தேனி மாவட்டமும் ஒன்று. ஆனால், சில சமூக விரோதிகளின் செயலால், வனமும், வன விலங்குகளும் அழிக்கப்படுகிறது என்பதே வேதனையான உண்மை.    

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close