Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தல் - கிரண்பேடியின் அடுத்த அஸ்திரம்....

 

”அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அதற்கு அரசியல் துணிவும் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் இன்றைய அதிகாரிகளிடம் இருந்து அத்தகைய ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை” என்று துணைநிலை ஆளுநர் கிரண்பேடி தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கும், முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அமைச்சரவைக்கும் கடும் பனிப்போர் நிலவி வருகின்றது. சென்டாக் அலுவலகத்தில் சி.பி.ஐ ரெய்டு, முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை முறைகேடுகள் தொடர்பாக வழக்கு, நியமன எம்.எல்.ஏ விவகாரம், துறைமுகத் திட்டம் என தொடர்ந்து கிரண்பேடியிடம் சிக்கித் தவிக்கிறது புதுச்சேரி அரசு. இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டும் என்று அடுத்த அஸ்திரத்தை வீசியிருக்கிறார் கிரண்பேடி.

 

இது தொடர்பாக வாட்ஸ்-அப்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்த வேண்டியது அவசியம். எனது இந்தக் கருத்து அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தினாலானது அல்ல. இதன் மூலம் எனது மன வருத்தத்தைத் தெரிவிக்கிறேன். அனைத்து கொம்யூன் பஞ்சாயத்துகளிலும் சொற்பமான பணியாளர்களும் போதிய வசதிகளின்மையும் காணப்படுகிறது. இதன் காரணமாக கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. அதனால் அந்தப் பகுதி மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து கிராமப்புற வளர்ச்சியில் அரசு அக்கறை செலுத்த வேண்டும். அப்போதுதான் கொம்யூன்களில் நிலவும் குடிநீர் பிரச்னை, திறன் மேம்பாடு, திறந்தவெளிக் கழிப்பிடம், ஏரி மற்றும் குளங்கள் தூர் வாருவது உள்ளிட்டப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.

 

மேலும் கிராமப் புறங்களில் இருந்து நகரத்துக்கு மக்கள் குடிபெயர்வைத் தடுக்கவும் முடியும். நூறு நாள் வேலை வாய்ப்புத் திட்டத்தையும் திறம்பட செயல்படுத்த முடியும். அதனால் அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து உள்ளாட்சித் தேர்தலை நடத்த முன்வர வேண்டும். அதற்கு அரசியல் துணிவும் அதிகாரிகளின் ஒத்துழைப்பும் அவசியம். ஆனால் இன்றைய அதிகாரிகளிடம் இருந்து அத்தகைய ஒத்துழைப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் மத்திய அரசிடம் இருந்து நிதியைப் பெற உள்ளாட்சித் தேர்தலை உடனே நடத்துவதுதான் சரியானதாக இருக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close