Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கோட்டைக் கதவு திறக்காததால் கோயிலுக்குச் சென்று முறையிட்ட பன்னீர்செல்வம்!

மிழக மக்கள் எல்லோரும் பிக் பாஸ் பக்கம் திரும்பியிருக்கிற நிலையில் அ.தி.மு.க புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த ஓ.பன்னீர்செல்வம் மும்பையிலுள்ள பிரசித்தி பெற்ற கோயிலில் சத்தமேயில்லாமல் பூஜை நடத்திக் கொண்டிருக்கிறார். 

ஓ.பி.எஸ்

கடந்த ஏழு மாதங்களாக சிதறிக்கிடக்கும் அ.தி.மு.க அணிகள் எப்போது இணையும் என்ற எதிர்பார்ப்பு எல்லோர் மத்தியிலும் இருப்பதுவே. ஓ.பி.எஸ் மற்றும் ஈ.பி.எஸ் அணியை இணைத்து விடும் முயற்சியில் பா.ஜ.க-வும் தன்முனைப்போடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குடியரசுத் துணைத் தலைவராக வெங்கய்ய நாயுடு பொறுப்பேற்கும் விழாவில் அணிகள் இணைப்புக்கான நாளினை மோடி குறித்திருக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.கவினர். அதேபோல, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினரும் ஓ.பி.எஸ்ஸை தங்கள் பக்கம் இழுக்க திட்டம் போடுகிறார்கள். ஆனால், எதற்கும் ஓ.பி.எஸ் வளைந்து கொடுப்பதாகத் தெரியவில்லை. அணிகள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கும்போதே புரட்சித்தலைவி அம்மா அணியினர் தேர்தல் ஆணையத்திடம் மேலும் புதிய ஆவணங்களைக் கொடுத்திருப்பது மோடியையே எரிச்சலூட்டியிருக்கிறதாம். இதனால்தான், டெல்லி சென்று பிரதமரைப் பார்க்க முனைந்த ஓ.பி.எஸ்க்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. 

இந்நிலையில்,  ஓ.பி.எஸ் நேற்று (சனிக்கிழமை) இரவு மும்பையிலுள்ள பிரசித்தி பெற்ற ஷானி ஷிங்னாப்பூர் கோவிலுக்குச் சென்று பூஜை நடத்தியிருக்கிறார். 

ஓ.பி.எஸ் ஷானி ஷிங்னாப்பூர் கோயிலில் பூஜை நடத்தியது அ.தி.மு.க அணிகள் இணைவதற்கான பிரார்த்தனையாக இருக்குமா அல்லது எடப்பாடியின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகவா என்று கட்சிக்குள்ளேயே பலரும் குழம்பிப் போயிருக்கிறார்கள். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close