Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’சிறிதளவும் கீழிறங்கிவிடக்கூடாது’: தொண்டர்களுக்கு சசிகலா வேண்டுகோள்!

'இயக்கம் ஒரு நாளும் சிறிதளவும் கீழிறங்கிவிடக்கூடாது’ என சசிகலா தொண்டர்களுக்கு வேண்டுகோள் கடிதம் விடுத்துள்ளார்.

சசிகலா

சொத்துக்குவிப்பு வழக்கில் நான்கு ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனைக் கைதியாக உள்ளார். ’சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா, நட்சத்திர ஓட்டலில் தங்குவதுபோல சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்; ஷாப்பிங் செல்கிறார். இந்த வசதிகளைப் பெறுவதற்கு அவர் 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்துள்ளார்' என்று கடந்த சில தினங்களாக  அனல் பறக்கும் விவாதங்கள் நடந்துகொண்டிருந்தன.

இந்நிலையில் கட்சியின் உள்ளும் பூசல்கள் உருவாகவே, கையைவிட்டு கட்சிப் பறிபோகாமல் இருக்க ஒவ்வொரு தரப்பினரும் ஒவ்வொரு முயற்சி எடுத்து வருகின்றனர். இந்த வேளையில் சிறையில் இருக்கும் சசிகலா, தொண்டர்களுக்கு உருக்கமான வேண்டுகோள் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ‘இந்திய நாட்டின் மூன்றாவது பெரிய இயக்கம் என்ற உயரத்தில் உள்ள கட்சியின் செல்வாக்கு சிறிதளவும் கீழிறங்கிவிடக்கூடாது. எஃகு கோட்டையில் விரிசல் விழுந்துவிடாதா எனப் பலரும் காத்திருக்கிறார்கள். அந்த விரிசல் விழும் சமயத்தில் தடி ஊன்றியாவது எழுந்துவிட மாட்டோமா என எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். கட்சியில் ஜெயலலிதா இருந்திருந்தால் எவ்வித பாதுகாப்பை உணர்வோமோ அந்தப் பாதுகாப்பை இனியும் உணரலாம்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close