Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அடுத்த மூன்று நாள்களுக்கு மழை தொடரும்..!

கடந்த சில நாள்களாக தமிழகத்தை மழை குளிர்வித்து வந்த நிலையில், இன்று முதல் அடுத்த மூன்று நாள்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை தொடர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை

கோடைக் காலம் முடிந்து, தென் மேற்குப் பருவமழை தொடங்கியது. ஆரம்பத்தில் சற்று வெப்பம் குறைந்து, மழைப் பொழிவு இருந்தது. வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது மழை பெய்தாலும், தொடர்ச்சியாக மழைப்பொழிவு இல்லை. ஆனாலும் கடந்த ஆண்டு போல் இல்லாமல், இந்தாண்டு தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தை ஏமாற்றிய போதும் தென் தமிழகத்தில் நல்ல மழைப்பொழிவு இருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெப்பச் சலனத்தால் இன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகக் கடலோர மாவட்டங்களில் இன்று மாலை கனமழை பெய்யவுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்தவரையில் இன்று காலையிலிருந்தே பல இடங்களில் லேசான சாரல் மழை பெய்துகொண்டிருக்கிறது. இன்று போலவே அடுத்த மூன்று நாள்களுக்கு கனமழை தொடரலாம் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close