Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா வசூல் வேட்டையில் அதிகாரிகள் - விழிபிதுங்கும் வியாபாரிகள்!

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவிற்காக அதிகாரிகள் அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியதால் விழிபிதுங்கி கிடக்கிறார்கள் வியாபாரிகள். கடலூரில் வரும் 16ந் தேதி, எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதற்க்காக கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளனர். இதனால் வியாபாரிகள் மட்டுமல்லாமல், அ.தி.மு.க. கட்சி பிரமுகர்களும் பெரும் கலக்கத்தில் கிடக்கின்றனர்.

 

இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த கடலூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் அறிவுடைநம்பி, "கடந்த ஆறு மாதங்களுக்கு முன், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தும் வகையில் அரசியல் கட்சியினர் யாரும் பேனர் வைக்கை கூடாது என்று ஆர்.டி.ஓ. தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார்கள்.

அப்படியிருக்கும்போது இவர்கள் மட்டும் எப்படி சாலையின் நடுவே ஆர்ச் போட்டிருக்கிறார்கள். அரசு விழாவில் கட்சி பேனர்கள். நகரத்தில் உள்ள சாலைகள் எல்லாம் பல்லிச்சிகிட்டு கிடக்கும்போது, விழா மேடைக்கு பல லட்சம் செலவில் தற்காலிக தாற்ச்சாலைகள். அத்தோடுமட்டுமில்லை, காவலர்களுக்கு பிரியாணி போடனும், விழா பந்தலுக்கு மணல் அடிக்கனும், பள்ளி மாணவர்களுக்கு வேன் ஏற்பாடு செய்யனும் என்று அதிகாரிகள் அதிரடி வசூல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். இதனால் நகரத்தில் உள்ள வியாபாரிகள் கலகத்தில் கிடக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றத்தின் போதும் நிவாரண பணிக்கு நிதி இல்லை என்று கையை விரிக்கும் மாவட்ட நிர்வாகம், பல கோடி ரூபாய் செலவில் இப்படியொரு அரசு விழா எப்படி நடத்துகிறது" என்றார் காட்டமாக.

                                                                  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close