Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

அரசுப் பள்ளி மாணவர்களை சிறப்பித்த முன்னாள் மாணவர்கள் அமைப்பு!

அரசுப் பள்ளியை ஊக்குவிக்கும் வகையில் பொது தேர்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப்பள்ளி  மாணவர்களை முன்னாள் மாணவர்களின் 'விழுதுகள்' அமைப்பு சிறப்பித்து பரிசுகள் வழங்கியுள்ளது. 

 
ராமேஸ்வரத்தில் இயங்கி வரும் அரசு பள்ளியானது சுமார் 62 வருட வரலாற்றை கொண்டது. ராமேஸ்வரம் தீவின் ஒரே மேல் நிலைப்பள்ளியாக விளங்கி வந்த இப்பள்ளிதான் தீவு மக்களின் கல்வி கனவை நிறைவேற்றும் ஒரே பள்ளியாக இயங்கி வந்தது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை சுமார் 2000 மாணவர்களை கொண்ட பள்ளியாக இயங்கி வந்தது. சமீப காலங்களில் அரசு எடுத்த நடவடிக்கை வாயிலாகவும், தனியார் பள்ளிகளின் தாக்கங்கள் காரணமாகவும் தீவு பகுதியில் ஏராளமான பள்ளிகள் உருவாகி விட்டன. இதன் காரணமாக ராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியின் மாணவர் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் கீழாக குறந்து போனது. 

அரசுப் பள்ளி மாணவர்களை  பாராட்டிய ஆட்சியர்

இந்நிலையில் இந்த பள்ளியினை மேம்படுத்தவும், மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் இப்பள்ளியின் துவக்கம் முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் இனணந்து அரசுப்பள்ளியின் 60-ம் ஆண்டு வைர விழாவினை கடந்த ஆண்டு சிறப்பாக கொண்டாடினர். அதன் ஒரு பகுதியாக 85-86-ம் ஆண்டு பயின்ற  மாணவர்கள் சார்பில் 'விழுதுகள்' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பினை சேர்ந்த மாணவர்கள் ஒன்றினணந்து சுமார் 1.50 லட்ச ரூபாயினை திரட்டினர். இந்த தொகையினை வங்கியில் வைப்பு நிதியாக செலுத்தி அதன் மூலம் கிடைக்கும் வருவாயினை  கொண்டு இப்பள்ளியில் பயின்று அரசு தேர்வுகளில் சிறப்பிடம் பிடிக்கும்  மாணவர்களுக்கு உதவும் வகையில் ஆண்டு தோறும் ஊக்க தொகையினை வழங்கி வருகின்றனர். 

இந்த ஆண்டு +2 மற்றும் 10-ம் வகுப்புகளில் சிறப்பிடம் பிடித்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஊக்க தொகை வழங்கும் விழா ராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. இவ்விழாவிற்கு தலைமை ஏற்ற மாவட்ட ஆட்சியர் நடராஜன் மாணவர்களுக்கு விழுதுகள் அமைப்பின் சார்பிலும், இப்பள்ளியில் பணியாற்றி மறைந்த ஆசிரியை ஜாஸ்வா நினைவகம் சார்பிலும்  ஊக்க தொகையினை வழங்கி பாராட்டினார். விழாவிற்கு முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை முத்துமாணிக்கம், முன்னாள் மாணவர்கள் நம்புபிச்சை, அப்துல்ஜபார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். ஆசிரியர்கள் மதிவாணன், ஜெயகாந்தன், பழனிச்சாமி, தினகரன் மற்றும் விழுதுகள் அமைப்பின்  நிர்வாகிகள் இளமுருகன், கலைமணி, கதிரவன், முனியசாமி, பால்ராஜ் உள்ளிட்ட முன்னாள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close