Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

இனி ஆன்லைன் மூலம் மட்டுமே பத்திரப்பதிவு: பத்திரப்பதிவு எழுத்தர்களின் நிலை என்ன?

பதிவுத்துறையில் மாற்றம் கொண்டுவரும் அடுத்த முயற்சியாக ஆன்லைன் பத்திரப்பதிவு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை மண்டலத்தில் மட்டும் 63 பதிவுத்துறை அலுவலகங்கள் இருக்கின்றன. அதில் வடசென்னை, மத்திய சென்னை, தென்சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய ஐந்து அலுவலகங்களில் மட்டும் பத்திரங்களை ஆன்லைன் மூலம் பதிவு செய்யும் முறை தற்போது உள்ளது.

பத்திரப்பதிவு

இதனால் பத்திர எழுத்தர்கள்களின் எதிர்காலம் இனி என்ன ஆகுமோ என்ற நிலை ஏற்பட்டது. இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டும் எழுத்தர்களுக்கு போதிய அனுபவம் இல்லாததால் நடைமுறைபடுத்துவதில் நீண்டகாலமாகவே சிக்கல் நீடித்து வந்தது. இந்தப் பிரச்னையை போக்கும் வகையில் பத்திர எழுத்தர்களுக்கு பயிற்சி அளிக்க பத்திரப்பதிவுத் துறை முன்வந்துள்ளது. அதன் ஒரு பகுதியாக நேற்று காஞ்சிபுரத்தில் ஆன்லைன் மூலம் பத்திரப்பதிவு செய்வது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களைச் சேர்ந்த பத்திரப்பதிவு எழுத்தர்கள் கலந்து கொண்டனர். இந்தப்பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு ஆவணங்களை எப்படி பூர்த்தி செய்வது, ஆன்லைன் முறையின் சிறப்பு அம்சம் என்ன என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது. படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து பதிவாளர் அலுவலக எழுத்தர்களுக்கும் இந்த பயிற்சி அளிக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close