Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

கல்லூரி மாணவியை ஏமாற்றிய போலீஸ்காரர் கைது!

கல்லூரி மாணவியுடன் தனிமையில் இருந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்ட போலீஸ்காரர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

arrest

 

புதுச்சேரி அரியாங்குப்பத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன். விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் காவலராகப் பணி புரிந்து வருபவர். உயரதிகாரிகளின் வாய்மொழி உத்தரவின் பேரில் தற்காலிகமாக ஆரோவில் காவல் நிலையத்தில் பணிக்கு அனுப்பப்பட்டார். அந்தக் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மொரட்டாண்டி என்ற ஊரில் இருந்த கோயில் பாதுகாப்புப் பணிக்கு அனுப்பப்பட்டார். அந்தக் கோயிலுக்கு அருகில் அரியாங்குப்பத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் கடை ஒன்றை நடத்தி வந்திருக்கின்றனர். அந்தக் கடைக்கு கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த அவர்களது 20 வயது மகள் அடிக்கடி சென்று பெற்றோர்களுக்கு உதவியாக இருந்திருக்கிறார்.

அப்போது கோயில் பாதுகாப்புப் பணிக்கு சென்ற காவலர் மணிகண்டனுக்கும் அந்தக் கல்லூரி மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. பழக்கம் நாளடைவில் காதலாக மாறியிருக்கின்றது. திருமணம் செய்து கொள்வதாக மணிகண்டன் வாக்குறுதி அளித்ததால் இருவரும் பல ஊர்களுக்குச் சென்று அடிக்கடி தனிமையில் சந்தித்திருக்கின்றனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு காவலர் மணிகண்டன் கிளியனூர் காவல் நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஆனால் அங்கு பணியில் சேராத மணிகண்டன் அந்தக் கல்லூரி மாணவியுடன் பல ஊர்களுக்குச் சென்று தங்கியிருக்கிறார். அப்போது மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டதும் அவருக்கு மூன்று குழந்தைகள் இருப்பதும் கல்லூரி மாணவிக்கு தெரிய வந்திருக்கின்றது. அதிர்ச்சியில் உறைந்த அவர் உடனே தனது பெற்றோர்களுக்குப் போன் செய்து தான் ஏமாற்றப்பட்டதை தெரிவித்திருக்கிறார். தன்னை வந்து அழைத்துச் செல்லுமாறும் அழுது கொண்டே கூறியிருக்கிறார். அதன்படி அந்த மாணவியின் பெற்றோர் வந்து அழைத்துச் சென்றுவிட்டனர்.

அதன்பிறகு அந்த மாணவிக்கு தொடர்ந்து போன் செய்திருக்கிறார் மணிகண்டன். ஆனால் அவரது போன் அழைப்புகளை அந்த மாணவி ஏற்காததால் ஆத்திரமடைந்திருக்கிறார் மணிகண்டன். அதனால் அந்த மாணவியுடன் தனிமையில் இருந்தபோது தெரியாமல் செல் போனில் எடுத்த வீடியோ மற்றும் அவருடன் வீடியோ சாட்டின் போது ரகசியமாக பதிவு செய்யப்பட்ட வீடியோவை மாணவியின் தோழிகளுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். மேலும் தன்னுடன் உடனே பேசவில்லை என்றால் வீடியோக்களை இணையத்தில் பரப்பிவிடுவேன் என்றும் கூறி மிரட்டியிருக்கிறார். இதில் அதிர்ச்சியடைந்த அந்த மாணவியின் பெற்றோர் கடந்த 11-ம் தேதி கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், காவலர் மணிகண்டனைக் கைது செய்து வானூர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close