Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

’டாஸ்மாக் கடைகளை நிரந்தரமாக மூட இதைச் செய்யுங்கள்’ - மல்லை சத்யா சொல்லும் ஆலோசனை!

டாஸ்மாக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த சில வருடங்களாகவே பெண்கள் போராட்டத்தில் குதிக்க தொடங்கிவிட்டனர். தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அப்புறப்படுத்த உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தொடர்ந்து பல்வேறு இடங்களில் புதிதாக டாஸ்மாக் கடைகளை திறக்க தமிழக அரசு முயற்சிகள் மேற்கொண்டது. இதனால் பெண்கள் கொதிப்படைந்தனர்.

மல்லை சத்யா, டாஸ்மாக்

கல்பாக்கம் அடுத்த இளையனார்குப்பத்தில் கடந்த ஜூன் மாதம் புதிதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைக்கு அப்பகுதியினர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த 9ம் தேதி, கல்பாக்கம் அணுமின் நிலைய பொறியாளர் ஒருவர் மல்லை சத்யாடாஸ்மாக் அருகே போதை ஆசாமி ஒருவரை அடித்துக் கொன்றுவிட்டார். இதனால் கொதிப்படைந்த அப்பகுதி மக்கள் டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களுக்கு ஆதரவாக மதிமுக துணைப்பொதுச் செயலாளர் மல்லை சத்யா, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் அப்துல் சம்மது உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து திருக்கழுக்குன்றம் வட்டாட்சியர் அந்த டாஸ்மாக் கடையை பூட்டி சீல் வைத்தார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய மல்லை சத்யா, “டாஸ்மாக் கடைகளை படிப்படியாக மூடுவோம் என்ற தமிழக அரசின் வாக்குறுதியின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டார்கள். பெண்கள் போராட்டம் ஒன்றே இதற்கு தீர்வு. தமிழகம் முழுவதும் பெண்கள் திரண்டு மதுக்கடைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடினால் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுவிடும். அதற்கு இந்த டாஸ்மாக் கடையே உதாரணம்” என்கிறார்

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close