Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தஞ்சையில் களைக்கட்டும் விதைப்பந்து திருவிழா!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் விதைப்பந்து திருவிழா தற்பொழுது நடைப்பெற்று வருகிறது. பட்டுக்கோட்டை விதைகள் அமைப்பின் ஏற்பாட்டில் நேற்று காலை 6 மணிக்கு தொடங்கிய இவ்விழா இரவு முழுவதும் நடைப்பெற்று, இரண்டாவது நாளாக இன்றும் உற்சாகமாக தொடர்கிறது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள், கல்லூரி மற்றும் பள்ளிக்கூட மாணவர்கள், பெண்கள், வணிகர்கள் என பல தரப்பினரும் இதில் கலந்து கொண்டு மிகுந்த உற்சாகத்தோடு விதைப்பந்துகளை உருவாக்கி வருகிறார்கள்.  

இது்வரை 6 லட்சம் பந்துகள் உருவாக்கப்பட்டுள்ளன. 48 மணிநேரத்தில் 11 லட்சத்து 11 ஆயிரத்து 111 பந்துகள் உருவாக்க வேண்டும் என்பதுதான் எங்கள் இலக்கு என்கிறார்கள் விதைகள் அமைப்பின் நிர்வாகிகள். ஏரி, ஆற்றங்கரை, அழிந்த காடுகள், பள்ளி, கல்லூரி போன்ற பொது இடங்களில் லட்சக்கணக்கில் மரங்களை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு மக்களின் பங்களிப்போடு விதைப்பந்துகளை உருவாக்கி வருகிறோம். குழி எடுத்து, உரம் போட்டு, கன்று நட்டு அதிக எண்ணிக்கையில் மரங்களை வளர்த்தெடுப்பது மிகவும் சிரமம். அது முழுமையான வெற்றியை கொடுக்காது.

seed ball festival

எரு, செம்மண், பொருக்கு களிமண் இவைகளோடு விதையை வைத்து பந்துகளாக உருட்டி பொது இடங்களில் வீசினால் பெரும் எண்ணிக்கையில் வெற்றிகர மாக மரங்களை வளர்த்தெடுக்கலாம். புங்கன், வேம்பு, ஆலம், அரசு, பனை, வாகை, கொன்னை மரங்களை உருவாக்க வேண்டும் என்பது எங்களது நோக்கம். 40 லட்சம் விதைகள் தானமாகவே கிடைத்துவிட்டது என இதன் நிர்வாகிகள் பெருமித்ததோடு தெரிவித்தார்கள்.  விதையைக் காப்பதுபோல, தாயான மண்ணை காக்க வேண்டும். மண் வளமாக இருந்தால்தான் விதைகள் முளைக்கும்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close