Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

 திருவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் திடீர்  போராட்டம்!

விருதுநகர் மாவட்டம்  திருவில்லிபுத்தூரில் விடுதலை சிறுத்தைகள் திடீர்  போராட்டம் நடத்தினர். விருதுநகர்  மாவட்டம் திருவில்லிப்புத்தூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொடிக்கம்பம் சாய்க்கப்பட்டதால், இன்று  பதற்றமும் பரபரப்பும்  ஏற்பட்டுள்ளது. திருவில்லிப்புத்தூர் சீனியாபுரம் விலக்கில் இன்று காலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி கொடிக்கம்பம் வளைக்கப்பட்டும், பேனர்கள் கிழிக்கப்பட்டும்,அதன் அருகில் இருந்த கடைகள் உடைக்கப்பட்டும் இருந்தது.

இத்தகவல் அறிந்து விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் புனிதன் தலைமையில் கட்சியினர் அங்கு கூடினர். பிறகு அனைவரும்திரண்டு  சாலைக்கு வந்தனர். இச்செயலை கண்டித்து சாலையில் அமர்ந்து ஆர்பாட்டம் செய்தனர். சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் வரையில் அங்கிருந்து நகர மாட்டோம் என்றனர். இதனால், அங்கு பதற்றம் அதிகரித்தது. இதற்கிடையே டி.எஸ்.பி.சங்கேஸ்வரன் தலைமையில்  காவல்துறையினர் வந்து விடுதலை சிறுத்தை கட்சியினரிடம் சமாதானம் பேசினார்கள். குற்றவாளிகளை உடனே கைது செய்வோமென்று உறுதி அளித்துள்ளனர். 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close