Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மருத்துவர்கள் இல்லாததால் 2 நோயாளிகள் பலி..! இது தமிழ்நாட்டின் சோகம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாததால் இரண்டு நோயாளிகள் பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோப்புப்படம்

வேலூர் மாவட்டம் ஆம்பூரில் அரசு மருத்துவமனை உள்ளது. அந்த மருத்துவமனைக்கு இன்று காலையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வைஷ்ணவி என்ற 13 வயது சிறுமி கொண்டுசெல்லப்பட்டிருந்தார். அந்தச் சிறுமிக்குத் தேவையான சிகிச்சை செய்வதற்கு மருத்துவர்கள் அங்கு இல்லை. மேலும், அதேப்போல சாலை விபத்தில் காயமடைந்த சென்னையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் அந்த மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளார்.

அவருக்கும் முதலுதவி சிகிச்சை அளிப்பதற்கு மருத்துவர்கள் இல்லை. அதனால், சிகிச்சை அளிக்க மருத்துவர்கள் இல்லாத நிலையில் இருவரும் பலியாகியுள்ளனர். இருவரையுமே மருத்துவர்கள் இருந்திருந்தால் காப்பாற்றியிருக்க முடியும் என்று உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால் ஆத்திமடைந்த உறவினர்கள், மருத்துவமனையின் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஏற்கெனவே கடந்த இரு தினங்களுக்கு முன் செய்தித்தாள் ஒன்றில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதாக செய்தி வெளிவந்துள்ளது. நீண்ட நாள்களாக மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்துவந்த நிலையில் இன்று இரண்டு பேர் உயிரிழக்க நேரிட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் ஆக்ஸிஜன் குறைபாட்டினால் 60-க்கும் மேற்பட்ட குழந்தைகள் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close