Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

சுதந்திர தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரியில் பாதுகாப்பு அதிகரிப்பு..!

நாடு முழுவதும் 71-வது சுதந்திர தினம் கொண்டாடத் தயாராகி வருகிறது. குமரி மாவட்டத்தில் 15-ம் தேதி காலை தேசியக் கொடியேற்றி  மரியாதை செய்யப்பட இருக்கிறது. சுதந்திர தினவிழாவையொட்டி குமரி மாவட்டத்தில் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. சோதனைச் சாவடிகள் மற்றும் கடலோரச் சோதனை சாவடிகளில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். லாட்ஜிகளிலும் தீவிர சோதனை நடந்துவருகிறது. சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் காந்தி மண்டபம், திருவள்ளுவர் சிலைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடு வரையுள்ள 44 கடலோர கிராமங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுபோல ரயில்வே ஸ்டேஷன்கள், சுற்றுலாத்தலங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில்வே ஸ்டேஷன்களில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இங்கு வரும் பயணிகளின் உடமைகள் கடும் சோதனை செய்த பின்னரே ரயிலில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், ரயில்வே ஸ்டேஷனில் ரயில்வே பாதுகாப்பு படையினரும் மோப்ப நாய்களின் உதவியோடு ரயில்வே சோதனைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பாம் ஸ்குவாட் வீரர்களும் தயார் நிலையில் இருக்கின்றனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1,200 போலீஸாரும் ஊர் காவல் படைவீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாகன சோதனையும், ரோந்து பணிகளும் தீவிரமாக குமரி மாவட்டத்தில் நடந்து வருகின்றன.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close