Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

யானைகளுக்கு பழங்கள் வழங்கிய மாணவர்கள்..!

சர்வதேச யானைகள் தினத்தையொட்டி ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் கோயில் யானை ராமலெட்சுமிக்கு கரும்பு, வாழைப் பழங்களை வழங்கினர்.

உலகின் மிகப்பெரிய மற்றும் புத்திக் கூர்மை கொண்ட விலங்கு யானை. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி உலக யானைகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நோக்கம் உலகெங்கிலும் உள்ள யானைகளை பாதுகாப்பதே ஆகும்.  வில்லியம் சாட்னர் என்பவர் தனியார் ஒருவர் வளர்த்து வரும் யானையை மீண்டும் காட்டுக்குள்ளேயே விடுவது என்பதை  மையமாகக் கொண்டு 'Elephants Return to the Forest' என்ற திரைப்படம் ஒன்றை உருவாக்கியிருந்தார். அந்தத் திரைப்படம் 2012-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ல் வெளியிடப்பட்டது. அந்த நாளையே உலக யானைகள் தினமாக உலகில் யானைகள் உள்ள நாடுகளும், 60-க்கும் மேற்பட்ட அமைப்புகளும் கொண்டாடி வருகின்றன.

கோயில் யானைக்கு பழங்கள் வழங்கிய மாணவர்கள்
 

உலக யானைகள் தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அரசு மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணி திட்டத்தின் சார்பில் சுற்றுச்சூழல் காப்போம் என்பது குறித்த விழிப்பு உணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கை ராமேஸ்வரம் சுழல் சங்கத்தலைவர் பாலசுப்பிரமணியம் தொடங்கி வைத்து சர்வதேச யானைகள் தினத்தின் முக்கியத்துவம் மற்றும் சூழல் பாதுகாப்பு அவசியம் பற்றி விளக்கினார். கருத்தரங்கில் பாலிதீன் ஒழிப்பின் அவசியம் அதில் மாணவர்கள் பங்களிப்பின் தேவை குறித்து ராமேஸ்வரம் நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு இயக்கத் துணைத் தலைவர் தில்லைபாக்கியம், உலக வெப்பமயமாதல் அபாயங்கள் குறித்து பள்ளி சுற்றுச்சூழல் மன்ற பொறுப்பாசிரியர் ஜேம்ஸ் ஆனந்தன் கருத்துகளை வழங்கினார். தலைமை ஆசிரியர் முத்துமாணிக்கம் தலைமை ஏற்றார். சர்வதேச யானைகள் தின கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக பள்ளியிலிருந்து ஊர்வலமாக சென்ற மாணவர்கள் ராமேஸ்வரம் திருக்கோயில் யானை ராமலெட்சுமிக்கு கரும்பு, வாழைப்பழங்கள் வழங்கி, யானை பாதுகாவலர் ராமுவிடம் யானைகளின் பழக்கவழக்கங்கள் பற்றி ஆவலாகக் கேட்டறிந்தனர். நிகழ்வுகளில் கம்பன் கழகப் பொருளாளர் ராமச்சந்திரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் ஜெயகாந்தன், தேசிய மாணவர் படை அலுவலர் பழனிச்சாமி, ஆசிரியர் தினகரன் மற்றும் ஏராளமான பக்தர்களும், சுற்றுலாப் பயணிகளும் பங்கேற்றனர்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close