Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

உள்ளூர் வணிகத்தைப் பாதுகாக்க போராடத் தயார்! - த. வெள்ளையன் ஆவேசம்

த.வெள்ளையன்

ஆன்லைன் வணிகம், ஜிஎஸ்டி வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக உள்ளூர் வணிகம் பாதிக்கப்படும் நிலையில் இருப்பதால், அதனைப் பாதுகாக்க போராட்டம் நடத்தப்படும் என வணிகர் சங்கங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக நச்சுப் பான நிறுவனங்களின் நதி நீர்ச் சுரண்டலையும், ஆன்லைன்  வணிக மோசடியையும், ஜிஎஸ்டி வரிவிதிப்பையும் முறியடிக்க நெல்லை, தூத்துக்குடி, குமரி, விருதுநகர், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த வணிகர்கள் பங்கேற்ற சுதேசி வணிகர் எழுச்சி தென் மண்டல மாநாடு நெல்லையில் நடைபெற்றது. 

வணிகர்கள் கூட்டம்

த. வெள்ளையன் தலைமையில் பல்வேறு மாவட்டங்களின் நிர்வாகிகள் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ’கடலை மிட்டாய், தண்ணீர் கேன், பிராண்டட் அரிசி, ஹோட்டல் உணவுப் பொருள்கள், பழைய பேப்பர், பழைய பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருள்களுக்கு அதிகமாக வரிவிதிப்பு செய்யப்பட்டிருக்கிறது. இதனால், இந்தத் தொழில் நலிவடைந்துவிடும். இதுபோன்று உள்நாட்டுத் தொழில்களையும் வணிகத்தையும் அழிக்க வேண்டும் என்பதற்காகவே ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்டுள்ளது. 

உலக வர்த்தக ஒப்பந்தத்தின் கேடுகள் குறித்தும் காந்திஜியின் சுதேசி ஆயுதத்தை கையில் ஏந்தவேண்டிய அவசியம் குறித்தும் நாட்டு மக்களுக்கு நேரில் சென்று விளக்கிட, வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக தமிழகம் முழுவதும் சுதேசி விழிப்பு உணர்வு பிரசார இயக்கம் நடத்தப்படும். பண்டிகை காலங்களில் திருமண மண்டபங்களில் தற்காலிக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதால் கடைகளின் வணிகம் பாதிக்கப்படும். அதனால் திருமண மண்டப வர்த்தகத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது’ என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

த.வெள்ளையன் பங்கேற்ற கூட்டம்

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய த.வெள்ளையன், ’’ஜிஎஸ்டி வரி விதிப்பால் வியாபாரிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்நியப் பொருள்களை இந்தியாவில் விற்பனை செய்யும் விதமாக உள்ளூர் பொருள்களுக்கு அதிக வரி விதிகப்பட்டிருக்கிறது. அதை முறியடிக்க வேண்டிய கடமை வணிகர் சங்கங்களின் பேரவைக்கு இருக்கிறது. ஜிஎஸ்டி வரி விதிப்பு காரணமாக சிறு வணிகர்களால் தொழில் செய்ய முடியாத நிலை உருவாகிவிடும். 

தமிழகத்தில் காலம் காலமாக உள்ள சிறு வணிகர்களையும் சிறு வணிகத்தையும் பாதுகாக்க வேண்டியது அவசியம். இதற்காகப் போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளோம். தாமிரபரணி நீரை பன்னாட்டு குளிர்பான நிறுவனங்கள் உறிஞ்சி எடுத்துக்கொள்ள நீதிமன்றம் அனுமதித்துள்ளது. அந்தத் தீர்ப்பை நீதிபதியே திருத்தி எழுத வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஏற்கெனவே நெருக்கடிக்கு உள்ளாகும் சிறு வணிகர்களை காவல்துறையினரும் பல்வேறு வழக்குகளைப் போட்டு நெருக்கடி கொடுக்கிறார்கள். அதை உயர் அதிகாரிகள் தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும்’’ என த.வெள்ளையன் வலியுறுத்தினார்.

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close