Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

'இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன' - வாசுகி

 

"மத்திய அரசு சி.பி.ஐ., மற்றும் வருமான வரித்துறை என்ற இரண்டு ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டு மாநில அரசை தங்களது அரசியல் லாபத்திற்காகப் பயன்படுத்துகிறார்கள்" என்ற குற்றச்சாட்டை செய்தியாளர்களிடம் இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசியத் துணைத் தலைவர் வாசுகி தெரிவித்தார்.

தொடர்ந்து அவர் பேசும் போது, "தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயிகளின் பயிர் கடன் 25,000 கோடி ரூபாயை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். பொது உரிமைகளுக்காகப் பொதுமக்கள் நடத்தும் போராட்டங்களை ஒடுக்க தமிழக அரசு காவல்துறையைக் கொண்டு  குண்டர் சட்டத்தில் கைது செய்து வருகிறது. இது கண்டத்துக்கு உரிய செயல். மக்களின் அத்தியாவசிய தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டால் போராட்டம் எங்கும்  நடைபெறாது. பூர்த்தி செய்யபடாததால்தான் தொடர்ந்து போராட்டங்கள் நடக்கின்றன.

கும்பகோணம் பள்ளி தீ விபத்தில் 93 குழந்தைகள் பலியான விவகாரத்தில் சம்மந்தப்பட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழகத்தில்  பா.ஜ.க தேசியத் தலைவர் அமித்ஷா வருவதால் எந்த அரசியல் மாற்றமும், தாக்கமும் ஏற்படாது. ஏற்கெனவே மத்திய அரசு சி.பி.ஐ மற்றும் வருமான வரித்துறை என்ற இரண்டு ஆயுதங்களைக் கையில் வைத்துக் கொண்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் அணியினரைப் பயமுறுத்தி தங்களின் அரசியலுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வருகின்றனர். அகில இந்திய அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்த விஷயத்தில் அரசு தலையிட்டு அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்" என்று தெரிவித்தார்.

 

Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

“மாட்டின் மீதான அக்கறை, சிசுக்கள் மீது கிடையாதா?!” நெஞ்சு பொறுக்குதில்லையே #GorakhpurTragedy
Advertisement

MUST READ

Advertisement
[X] Close