Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தவிட்டு அப்பம் தெரியுமா?

பண்டிகை தினங்களில் தவிட்டு அப்பம் செய்து உண்பது, தமிழர்களின் மரபு. தூய வெல்லம் அல்லது பனை வெல்லத்துடன் வறுத்த தவிட்டைச் சேர்த்து சப்பாத்தி மாவைப்போல பிசைந்துகொண்ட பிறகு, இதைச் சற்று கனமாகத் தட்டி, தீக்கனலில் சுட்டு உண்பார்கள் என வரலாறு தெரிவிக்கிறது. குறிப்பாக ஆடி வெள்ளி, மற்றும் ஆவணி ஏகாதசிகளில் இந்தத் தவிட்டு அப்பம் அல்லது அடையை உண்பது தமிழர்களின் வழக்கம்.

தவிட்டு அப்பம்

தவிடு, நார்ச்சத்துகொண்ட நல்ல உணவு. வைட்டமின் - பி உள்ளிட்ட பல சத்துகளும் உள்ளன. வெல்லத்தில் இரும்புச்சத்து உள்ளது. எனவே, இவை பெண்களுக்கு மிகவும் நல்லது. விரத நாள்களில் பெண்கள் கூடி,  மாலை நேரம் வெறும் வயிற்றில் இதை உண்டதாகச் சான்றுகள் தெரிவிக்கின்றன. இன்றும் நெல்லை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் இந்தத் தவிட்டு அப்பம் இல்லாமல் பண்டிகை விரதங்களே இல்லை எனலாம். கேரளாவிலும் இதை உண்ணும் வழக்கம் உள்ளது. இந்த அப்பத்தை அவர்கள் கனகப்பொடி என்கிறார்கள். கர்நாடக கிராமங்களிலும் இந்த வழக்கம் உண்டு. முக்கியமாக, மாடு வளர்க்கும் வீடுகளில் இந்தத் தவிட்டு அப்பம் உண்ணும் வழக்கம் இருந்துவந்துள்ளது.

ஆயர்பாடியில், கிருஷ்ணர் கோபியர்களின் வீடுகளுக்குச் சென்று, இந்தத் தவிட்டு அப்பத்தை விரும்பி உண்டதாகப் புராணங்கள் சொல்கின்றன. காலம் செல்லச் செல்ல எத்தனையோ வழக்கங்களை, உணவுகளை மறந்துவிட்டோம். அதனால், ஆரோக்கியத்தையும்  இழந்துவிட்டோம். அதில் ஒன்றுதான் தவிட்டு அப்பம். அது சரி, இப்போது தவிடு கிடைக்கிறதா என்ன? 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close