Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

குடியிருப்பைக் காலிசெய்ய வந்த அதிகாரிகள்! கொந்தளித்த மக்கள்

புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாகக் குடியிருக்கும் மக்களின் குடியிருப்புகளை அகற்ற வருவாய்த்துறை வந்ததால், அந்த மக்கள் சாலை மறியல் செய்தனர். இதனால் பரபரப்பு நிலவியது.

ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி வட்டத்தில் உள்ள சாவடிப்பாளையம் புதூரிலிருந்து காங்கேயம்பாளையம் செல்லும் குறுக்குச்சாலையில், சாலைப் புறம்போக்கை ஆக்கிரமித்து, கடந்த 40 வருடங்களாக 33 குடும்பங்கள் வசித்துவந்தன. அந்தப் பகுதியில் சேரும் குப்பை, அருகில் உள்ள கதிர்வேல் என்பவரது தோட்டத்தில் புகுந்தது. இதனால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் கதிர்வேல். நீதிமன்ற உத்தரவுப்படி, கடந்த 8-ம் தேதி, 'வீடுகளைக் காலிசெய்ய வேண்டும்' என்ற உயர் நீதிமன்ற ஆணையை அதிகாரிகள் ஒவ்வொரு வீட்டிலும் நோட்டீஸ்களாக அச்சடித்து வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், மொடக்குறிச்சி தாசில்தார் மாசிலாமணி, பயிற்சி உதவி கலெக்டர் ராஜ்குமார், பி.டி.ஓ சசிகலா, இன்ஸ்பெக்டர் சேகர் ஆகியோர், 33 வீடுகளையும் அகற்ற ஜே.சி.பி இயந்திரத்தோடு வந்தனர். அங்கு கூடியிருந்த மக்கள், அதிகாரிகளை முற்றுகையிட்டதோடு, சாலை மறியல் செய்தனர். ஆனால், அதிகாரிகள் அதற்கு அசைந்துகொடுக்கவில்லை. வீடுகளை அகற்ற  அதிவிரைவு போலீஸ் படையை வரவழைத்தனர். பின்னர், வீடுகளுக்கான மின் இணைப்புகளை துண்டித்தனர். பூச்செடிகள் மற்றும் மரங்களை ஜே.சி.பி இயந்திரம்மூலம் அகற்றினர். வேறு வழியில்லாமல், மக்கள் தாங்களாகவே வீடுகளில் உள்ள பொருள்களை அகற்றி தனியார் தோட்டத்துக்குள் வைத்தனர்.

இந்நிலையில், நம்மிடம் பேசிய பா.ம.க மாநில துணைத் தலைவர் வடிவேல்,  "இந்த மக்கள் 40 வருடங்களாக இங்கே குடியிருக்கிறார்கள். திடீரென்று அவர்களைக் காலி பண்ணச் சொன்னால், எங்கே போவார்கள். சென்னை உயர் நீதிமன்றத்தில் வீடுகளைக் காலிசெய்ய அவகாசம் கேட்டு வழக்குத் தொடர்ந்தோம். அதன் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணா, வீடுகளை அகற்ற இரண்டு வார கால அவகாசம் வழங்கி நேற்று முன்தினம் உத்தரவிட்டார். ஆனால், அதிகாரிகள் அதை மீறி வீடுகளை அகற்றத் துடிக்கின்றனர். அந்த 33 குடும்பங்களுக்கும் அரசு குடியிருக்க மாற்று இடம் வழங்க வேண்டும்" என்றார். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close