Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மு.க.ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்!

MK Stalin

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் வெற்றி பெற்றதை எதிர்த்து சைதை துரைசாமி தொடர்ந்த வழக்கில் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

2011-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தி.மு.க சார்பில் மு.க.ஸ்டாலினும் அ.தி.மு.க சார்பில் சைதை துரைசாமியும் போட்டியிட்டனர். இதில் மு.க.ஸ்டாலின் 68,677 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். சைதை துரைசாமி 65,943 வாக்குகள் பெற்றுத் தோல்வியடைந்தார்.

இதனிடையே, மு.க.ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சைதை துரைசாமி வழக்குத் தொடர்ந்தார். அதில், "அதிகாரத்தைப் பயன்படுத்தி மு.க.ஸ்டாலின் வெற்றிபெற்றுள்ளார். இதனால் அவரின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார். ஆறு ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் ஜூன் 1-ம் தேதி தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றம், மு.க.ஸ்டாலின் வெற்றி செல்லும் என்று தீர்ப்பளித்தது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து சைதை துரைசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் மற்றும் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close