Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

தங்கம்போல விலை ஏறிக்கொண்டேபோகும் அயிரைமீன்

மீன்களில்  சுவையானது கடல் மீன்கள்தான். அதிலும் வஞ்சிரம், விளமீன், வாவல், இறால் போன்ற மீன்களுக்கு நிகரில்லை. அதன் விலை எப்பவும் ஏற்றத்திலேயே இருக்கும். ஆனால், தற்போது  நன்னீர் மீன்களான அயிரைமீன், விரால்மீன்களின் விலை, கடல்மீன்களை விட அதிகமாகிவிட்டது. காரணம்,  தனித்துவமான சுவையாலும் குறைவான உற்பத்தியாலும். வஞ்சிரம் கிலோ 700 முதல் 1000 ரூபாய் வரை கிடைக்கும்போது,  அயிரை மீன் 2,500 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.  

 குமார்மெஸ் உரிமையாளரிடம் பேசினோம், ‘’தென் மாவட்டங்களில், அயிரைமீன் சாப்பிடுவதை மீன்பிரியர்கள் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். மதுரை ஹோட்டல்களில்  அயிரைமீனின்  செய்முறையே தனி என்பதால்,  அதன் தேவை மிக அதிகம். அயிரைக்காக  வெளியூர்காரர்கள், வி.ஐ.பி-கள் மதுரை வருகிறார்கள். தற்போது, தென்மாவட்ட ஆறுகளில் தண்ணீர் இல்லாததால், அயிரை வரத்து இல்லை. வேறு மாவட்டங்களிலிருந்து அயிரை வாங்கிவருகிறார்கள். ஒரு கிலோ 2,500 ரூபாய்க்கு வியாபாரிகள் தருகிறார்கள். கஸ்டமர்களுக்கு குறைந்த விலைக்குக் கொடுக்க முடியாது என்பதால், சில நாட்கள் அயிரை மீன் போடுவதை நிறுத்தி விட்டோம். தற்போது மழை பெய்வதால், இன்னும் சில நாட்களில் விலை குறைந்துவிடும். அப்போது, வழக்கமான விலையில் கொடுப்போம்’’என்றார்.

 தற்போது, மதுரை ஹோட்டல்களில் அயிரைமீன், வரியுடன் 250 முதல் 300  ரூபாய் வரை விற்கப்படுகிறது

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close