Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மீண்டும் காக்கி உடை அணியும் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட்

மும்பையில், லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் உள்பட 113 நிழல் உலக தாதாக்களை என்கவுன்டர் செய்த போலீஸ்இன்ஸ்பெக்டர் பிரதீப் சர்மா, மீண்டும் காக்கி உடை அணியப்போகிறார். 

போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரதீப் சர்மா

2008-ம் ஆண்டு, தாராவி போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக இருந்த பிரதீப் சர்மா, தாவூத் இப்ராஹிம் கும்பலுடன் தொடர்பு வைத்திருந்ததாகப் பணிநீக்கம் செய்யப்பட்டார். நிழல் உலக தாதா, சோட்டா ராஜனின் கூட்டாளி லக்கான் பையா, போலி என்கவுன்டர் வழக்கும் இவர்மீது தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கில், 2010-ம் ஆண்டு பிரதீப் சர்மா கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.  2013-ம் ஆண்டு லக்கான் பையா என்கவுன்டர் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பில், 13 போலீஸார் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். பிரதீப் சர்மா உள்ளிட்ட  எட்டுப் பேர் விடுவிக்கப்பட்டனர். 

இந்நிலையில், மகாராஷ்டிரா அரசு பிரதீப் சர்மாவுக்கு மீண்டும் போலீஸ் பணி வழங்கியுள்ளது. தானா மாநகரத் துணை கமிஷனராக அவர் நியமிக்கப்பட உள்ளார். 2018-ம் ஆண்டு வரை அவருக்குப் பணிகாலம் இருக்கிறது. லக்கான் பையா வழக்கில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ள நிலையில், பிரதீப் சர்மாவை ஒரு வாரத்துக்குள் பொறுப்பேற்கும்படி அறிவுறுத்தியுள்ளது மகாராஷ்டிரா அரசு. பல பாலிவுட் படங்களுக்குத் தீனிபோட்டது இவரது என்கவுன்டர்  பாணிதான். கடந்த ஆண்டு மற்றோர் என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் சப்- இன்ஸ்பெக்டர் தயா நாயக், மீண்டும் பணிக்கு அமர்த்தப்பட்டார். இவர் செய்த என்கவுன்டர்களின் எண்ணிக்கை 83.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close