Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

மத்திய அமைச்சர்கள், மூத்த அதிகாரிகளுக்காக 10,000 எலெக்ட்ரிக் கார்கள்! 

மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்க அரசு திட்டமிட்டுள்ளது. 
2014-ம் ஆண்டில், உலக சுகாதார நிறுவனம் (WHO) உலகில் அதிகக் காற்று மாசுபாடு உள்ள 20 நகரங்களின் பட்டியலில் 13 இந்திய நகரங்கள் இருப்பதாகப் பட்டியலிட்டது. ஒவ்வொரு வருடமும், இந்தியாவில் கிட்டத்தட்ட 10 லட்சம் மக்கள் நச்சு வாயுக்களைச் சுவாசிப்பதன் மூலம் இறப்பதாக ஆய்வு நிறுவனம் தெரிவிக்கிறது. 

எலக்ட்ரிக் கார்

இந்த நிலையில் மத்திய அமைச்சர்கள் மற்றும் மூத்த அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக பேட்டரியில் இயங்கும் 10,000 எலெக்ட்ரிக் கார்களை வாங்க, எரிசக்தி பாதுகாப்பு சேவைகள் லிமிடெட் (EESL - The Energy Efficiency Services Ltd) முடிவு செய்துள்ளது. இந்த பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் கார்கள் ஒருமுறை சார்ஜ் செய்தால் 120 முதல் 150 கிலோ மீட்டர் வரை பயணிக்கும். நேஷனல் எலக்ட்ரிக் மொபிலிட்டி மிஷன் பிளான் (National Electric Mobility Mission Plan) படி, 2020-ம் ஆண்டில் 60 லட்சம் முதல் 70 லட்சம் எலெக்ட்ரிக் கார்களை இந்தியச் சாலையில் பயன்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close