Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓ.பன்னீர்செல்வத்துடன் அமைச்சர்கள் திடீர் சந்திப்பு!

panneerselvam

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர் இன்று நேரில் சந்தித்துப் பேசினர். அணிகள் இணைப்பு குறித்துப் பேசப்படும் நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது.

ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு, அ.தி.மு.க மூன்று அணிகளாகப் பிரிந்தது. ஓ.பன்னீர்செல்வம் அணியினரை இணைக்கும் முயற்சியில் முதல்வர் பழனிசாமி அணியினர் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் தினகரன் அணியினரை ஓரங்கட்டும் நடவடிக்கையும் பழனிசாமி அணியினர் மேற்கொண்டு வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், அணியில் இணைய ஓ.பன்னீர்செல்வம் அணியினர் இரண்டு கோரிக்கைகள் வைத்தனர். அதில், ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் மற்றும் சசிகலா குடும்பத்தைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்பது பன்னீர்செல்வம் அணியின் கோரிக்கையாகும். இந்தக் கோரிக்கைகளை முதல்வர் பழனிசாமி அணியினர் நிறைவேற்றிவிட்டனர். இதை வரவேற்றுள்ள பன்னீர்செல்வம் அணியினர், பழனிசாமி அணியுடன் இணைவது குறித்து இன்று மாலை முக்கிய முடிவு எடுக்க உள்ளனர்.

இதனிடையே, ஓ.பன்னீர்செல்வத்தை அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோர் இன்று சென்னைப் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சந்தித்துப் பேசியுள்ளனர். பன்னீர்செல்வத்தின் தாயார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து விசாரிக்க அமைச்சர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அணிகள் இணைப்பு குறித்துப் பேசப்படும் நிலையில் அமைச்சர்கள் இரண்டுபேர் பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close