Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

''அமித் ஷா தமிழகம் வருவது ஏன்..?'' ஹெச்.ராஜா சொல்லும் காரணங்கள்

அமித் ஷா தமிழகம் வருவதற்கான காரணங்களை பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா பட்டியலிட்டுள்ளார்.

அமித் ஷா


பி.ஜே.பி தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறுகையில், ''2019-ம் ஆண்டு வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேசியத் தலைவர் அமித் ஷா, பெரிய மாநிலங்களில் மூன்று நாள்கள், சிறிய மாநிலங்களில் இரண்டு நாள்கள், யூனியன் பிரதேசங்களில் ஒரு நாள் என்று அவருடைய சுற்றுப் பயணம் திட்டமிடப்பட்டது. ஏற்கெனவே, கேரளா மற்றும் புதுச்சேரியில் தலைவரின் சுற்றுப்பயணம் மிக சிறப்பாக இருந்தது. அவர் வருகையால் அங்கு பி.ஜே.பி அமைப்பு, கட்சியின் தொண்டர்கள் உற்சாகத்தோடு பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். 
அதுபோல தமிழகத்திலும் ஆகஸ்ட் 22, 23, 24 ஆகிய தேதிகளில் அமித் ஷா பயணம் திட்டமிடப்பட்டுள்ளது. அதில், கட்சியின் பல்வேறு அமைப்புகள், அணிகள் மற்றும் மாநிலம், மாவட்டம் என்று பல்வேறு கட்டத்தில் இருக்கும் நிர்வாகிகளை சந்தித்துப் பேசுகிறார். 2019 தேர்தலில் எவ்வாறு பயணிக்க வேண்டும் என்று அப்போது பேச இருக்கிறார். தென் மாநிலங்களில் 150 தொகுதிகளில் கட்சியை வலுப்படுத்துவது, அங்கு வெற்றி பெற வேண்டும் என்ற திட்டத்தோடு நாம் செயலாற்றிக் கொண்டு இருக்கிறோம். அதற்கு அமித் ஷா பயணம் பக்க பலமாக இருக்கும். கட்சித் தலைவர்களுக்கு, தொண்டர்களுக்கு உறுதுணையாக இருக்கும். 

ஹெச்.ராஜா

மேலும், அமித் ஷா தமிழக வருகையின்போது கட்சி அமைப்புகளைத்தாண்டி பத்திரிகை ஆசிரியர்களையும் சந்திக்க இருக்கிறார்; அறிஞர்களையும் சந்திக்க இருக்கிறார். பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த ஓ.பி.சி சமுதாயத் தலைவர்களோடும் கருத்து பரிமாற்றத்துக்கான கூட்டம் ஏற்பாடாகி இருக்கிறது. காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் மட்டுமல்ல அவர்களின் மாநில பொறுப்பாளர்கள் கூட இந்த மாதிரி சந்தித்தது இல்லை. தமிழ்நாட்டுக்கு இந்த நாட்டை வழிநடத்திக் கொண்டிருக்கும்  மோடி தலைமையும் அமித் ஷா வழிகாட்டுதலும் தேவை. அதை அனைத்து தரப்பினரும் எதிர்பார்க்கிறார்கள். எனவே, அமித் ஷாவை வரவேற்க இளைஞர்கள் அணி திரண்டு வாருங்கள் என்று அழைக்கிறேன். தமிழ்நாட்டில் சென்னை, கோவையில் ஆகஸ்ட் 22 முதல் 24-ம் தேதி வரை நடைபெறும் மூன்று நாள் சுற்றுப்பயணம் மகத்தான வெற்றி பெறும்'' என்று கூறினார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close