Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஓய்வுபெறும் நாளிலே பண பலன் வழங்க வேண்டும்! - ஓய்வூதியர் சங்கத்தினர் வலியுறுத்தல்

ஆர்ப்பாட்டம்

ஓய்வுபெறும் நாளிலேயே பண பலன் அனைத்தையும் அரசு வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் உள்ளாட்சி மற்றும் பொதுத்துறைகளில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்கள் அடங்கிய அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பின் நெல்லை மாவட்டம் சார்பாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் முத்துசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், போக்குவரத்து ஓய்வு பெற்றோர் நலச் சங்கம், மாவட்ட அரசு பென்சனர் சங்கம், தமிழ்நாடு ஓய்வூதியர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்கள் பங்கேற்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிலாளர்களின் ஓய்வூதியத்தை 2008 மறுசீரமைப்புக் குழு பரிந்துரையின்படி தமிழக அரசே பொறுப்பேற்று வழங்க வேண்டும். கடந்த 2016-ம் வருடம் முதலாகவே போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படவில்லை. அதை நிலுவைத் தொகையுடன் வழங்க வேண்டும். ஓய்வூதியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். ஓய்வூதியர்களுக்கு சேம நலநிதி ஏற்படுத்த வேண்டும். ஓய்வுபெற்றவுடனேயே பண பலன்களை வழங்கிட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஓய்வுபெற்ற பின்னர் பண பலன் கிடைக்காமல் அலைமோதும் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு அரசே பொறுப்பேற்று பண பலனை வழங்க வலியுறுத்தி இதில் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டு இருந்தது.  

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close