Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

பிக்பாஸைப் போல `லால் சலாம்' மூலம் மோகன்லால் கலக்குவாரா?

மிழகத்தில் பலரின் ஃபேவரைட் நிகழ்ச்சியாக மாறிவிட்டது `பிக் பாஸ்'. பல கட்ட சுவாரஸ்யங்கள், திருப்பு முனைகள் என தற்போது 50 நாள்களைக் கடந்து விஜய் டிவியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. நடிகராக, இயக்குநராக, பாடகராக, தயாரிப்பாளராக எனப் பல பரிமாணங்களில் பார்த்த கமலஹாசன், இந்த நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளராகவும் தனது நேர்த்தியான பேச்சினால் அனைவரையும் அசரடித்து வருகிறார். 

லால் சலாம்

இந்த நிலையில் கமல்ஹாசனைப் போல மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும் சின்னத் திரையில் கலக்கக் களம் இறங்குகிறார். மலையாளத்தின் அமிர்தா தொலைக்காட்சியில் `லால் சலாம்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் மோகன்லால் பங்கேற்கிறார். இந்த நிகழ்ச்சி நிச்சயம் மோகன்லால் ரசிகர்களுக்குச் சிறந்த ட்ரீட் ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் பிக்பாஸ்... பிக்பாஸ்... பிக்பாஸ்... எனத் திரும்பிய இடங்கள் எல்லாம் பிக்பாஸ் பற்றிய பேச்சுதான். இதைப்போல மலையாளத்திலும் `லால் சலாம்' நிகழ்ச்சி பரபரப்பாக நகருமா அல்லது கொஞ்சம் டல்லடிக்குமா என்பதைப் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும். 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close