Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

செவ்வாய்க் கிழமை விசாரணைக்கு வருகிறது சசிகலா மறுசீராய்வு மனு!

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றுள்ள சசிகலா, இளவரசி ஆகியோர் தங்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறுசீராய்வு செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

 சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்குக் கடந்த பிப்ரவரி மாதம் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மூவரும் பெங்களூரு சிறையில் தண்டனை பெற்றுவருகின்றனர். இந்நிலையில், தங்களுக்கு வழங்கப்பட்ட நான்கு வருட சிறைத் தண்டனையை மறுசீராய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர் சசிகலா தரப்பினர்.

சசிகலா

இந்த மறுசீராய்வு மனு மீதான விசாரணை வருகிற செவ்வாய்க் கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெறும் வழக்குகள் பட்டியலில் சசிகலாவின் மறுசீராய்வு மனுவும் உள்ளது. சசிகலா தரப்பினர் தங்களின் நான்கு வருட தண்டனையை மறு சீராய்வு செய்ய வேண்டும் என்றும், வழக்கிலிருந்து முழுவதுமாக விடுவிக்க வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close