Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

வெளிநாட்டில் முதலீடு செய்யாத ஒரே நிறுவனம் எல்ஐசி... மதுரை வைர விழாவில் பேச்சு!  

எல்ஐசி-யின் வைர விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. மதுரை கோட்டத்தில் நடந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் வீரராகவராவ் வாழ்த்திப்பேசினார். வாடிக்கையாளர்கள், மூத்த அலுவலர்கள், முகவர்கள் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர். 
   

தென்மண்டல மேலாளர் தாமோதரன், ''எல்ஐசி-யில் மக்கள் செலுத்தும் பணத்தை நல்ல முறையில் முதலீடு செய்துள்ளதால், லாபத்தை வாடிக்கையாளர்களுக்குத் திருப்பி அளிக்க முடிகிறது. நாட்டின் கட்டமைப்பு வசதிகளுக்கு ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் கடன் கொடுத்துள்ளோம்.  ரயில்வேயின்  திட்டங்களுக்கு ஒன்றரை லட்சம் கோடி ரூபாய், வருடத்துக்கு முப்பதாயிரம் கோடி ரூபாய் எனக் கடனாக கொடுக்கிறோம். எஸ்பிஐ உட்பட  அனைத்து வங்கியிலும் 15 சதவிகிதத்துக்கு மேல் முதலீடு செய்துள்ளோம். அதனால், அத்தனை வங்கியின் இயக்குநர் குழுவிலும் எல்ஐசி அதிகாரிகளும் இருக்கிறார்கள்.

காப்பீட்டு நிறுவனங்களில் வாடிக்கையாளர்களுக்கு 99.7 சதவிகிதம் க்ளைம் கொடுப்பது எல்.ஐ.சி.மட்டும்தான். மத்திய, மாநில அரசுகளுக்குக் கடன் வழங்குகிறோம். அறுபது ஆண்டுகளுக்கு முன் எல்ஐசி-யில் கேபிட்டல் நிதியாக மத்திய அரசு ஐந்து கோடி ருபாய்  கொடுத்தது. அதற்கு  டிவிடெண்டாக ஆண்டுக்கு 2,400 கோடி ரூபாய் வழங்குகிறோம். ஆனால், இதிலிருந்து ஒரு ரூபாயை கூட வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்யவில்லை. வாடிக்கையாளர்களுக்குப் பல வசதிகளைச் செய்து தரும் நாங்கள், விரைவில் ஆன்லைன் மூலமாக கடன் வாங்கும் முறையைக் கொண்டு வரப்போகிறோம்'' என்றார்.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement

MUST READ

Advertisement
[X] Close